மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரசித்தி பெற்ற ஆல்டோ K10 காரில் உள்ள ஸ்டீயரிங் கியர்பாக்ஸ் பிரச்சனையால் சுமார் 2,555 கார்களை திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது.
ஸ்ட்யரிங் கியர்பாக்சில் ஏற்பட்டுள்ள கோளாறினை சரி செய்வதற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ள இந்த கார்களுக்கான ஒரு உதிரிபாகங்கள் முற்றிலும் இலவசமாக மாற்றித் தரப்பட உள்ளது.
இது குறித்து மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஸ்டீயரிங் கியர்பாக்ஸ் அசெம்பிளியில் (“பகுதி”) குறைபாடு இருப்பதாக சந்தேகிக்கப்படுகின்ற 2,555 ஆல்டோ K10 வாகனங்களை திரும்பப் பெறுவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த குறைபாடு, அரிதான சந்தர்ப்பங்களில், வாகனத்தின் ஸ்டீயரிங் கட்டுப்பாட்டை பாதிக்கலாம். மிகுந்த எச்சரிக்கையுடன், பாதிக்கப்பட்ட வாகனங்களின் வாடிக்கையாளர்கள், பகுதி மாற்றப்படும் வரை வாகனத்தை ஓட்டவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் மாருதி சுஸுகியின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலம் தொடர்பு கொண்டு, பாகத்தை பரிசோதிக்கவும் மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுளளது” என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.