ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் செடான் மாடல் ஆனது புதுப்பிக்கப்பட்ட மாடலாக வருகின்ற ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்பொழுது உள்ள மாடலின் வசதிகளில் கூடுதலான இன்டீரியர் அம்சங்கள் மற்றும் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களை பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் இந்த மாடலானது ஏற்கனவே சந்தையில் இருக்கின்ற ஹூண்டாய் ஆரா மற்றும் புதிதாக வரவுள்ள 2024 மாருதி சுசூகி டிசையர் போன்ற மாடல்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்த வகையில் அமைந்திருக்கும்.
தோற்ற அமைப்பில் புதிய டிசைன் அலாய் வீல் பக்கவாட்டில் பெரிதாக மாற்றங்கள் இல்லை என்றாலும் முன்புறத்திலும் பின்புற பம்பர் என பல்வேறு மாற்றங்கள் பெற்று இருக்கும் கூடுதலாக அடிப்படையான பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டிருக்கலாம்.
தொடர்ந்து தற்பொழுது அமேஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 Hp பவர் வழங்குவதுடன் 5 ஸ்பீடு மேனுவல் அல்லது CVT கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். கூடுதலாக இந்த முறை சிஎன்ஜி ஆப்ஷன் இடம்பெற்றிருக்கலாம்.