இந்தியாவில் சிட்ரோன் நிறுவனத்தின் 5வது மாடலாக வெளியாகியுள்ள Basalt கூபே எஸ்யூவி மாடலில் மிகச் சிறப்பான வசதிகளை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அடிப்படையாகவே 6 ஏர்பேக்குகள் அனைத்து வேரியண்டிலும் கிடைக்க உள்ளது.
பாசால்டில் 1.2 லிட்டர் NA எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் என இரு விதமான ஆப்ஷனில் வழங்கப்பட உள்ளது. போலார் வெள்ளை, ஸ்டீல் கிரே, பிளாட்டினம் கிரே, காஸ்மோ நீலம், கார்னெட் சிவப்பு என 5 ஒற்றை நிறங்களுடன் கருப்பு நிற மேற்கூரையுடன் போலார் வெள்ளை, மற்றும் கார்னெட் சிவப்பு என இரு டூயல் டோன் நிறங்களை கொண்டுள்ளது.
Citroen Basalt
துவக்க நிலை வேரியண்டில் 1.2 லிட்டர் Puretech 82 நேச்சுரல் ஆஸ்பிரேட்டேட் எஞ்சின் அதிகபட்சமாக 82 PS பவர் மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது. இந்த 1.2லிட்டர் NA எஞ்சின் மைலேஜ் 18Kmpl ஆகும்.
அடுத்து, 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் Puretech 110 எஞ்சின் பவர் 110 PS மற்றும் 190 Nm டார்க் (205 Nm டார்க் ஆட்டோமேட்டிக்) வெளிப்படுத்துகின்றது. இதில் ஆறு வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது. டர்போ எஞ்சின் மேனுவல் மைலேஜ் 19.5Kmpl மற்றும் ஆட்டோமேட்டிக் மைலேஜ் 18.7Kmpl ஆகும்.
முன்புறத்தில் ஏற்கனவே விற்பனையில் உள்ள மாடல்களான C3, C3 ஏர் கிராஸ் ஆகியவற்றை நினைவுபடுத்தும் வகையிலான முன்பக்க கிரில் மற்றும் புதிய எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி ரன்னிங் விளக்குகளை கொண்டிருக்கின்றது.
பாசால்ட்டின் வீல்பேஸ் 2,651 மிமீ கொண்டுள்ள நிலையில் கிரவுண்ட் கிளியரன்ஸ் 180 மிமீ ஆக உள்ள நிலையில் 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல் பெற்று உயரமான வீல் ஆர்ச் பக்கவாட்டில் பெற்றுள்ளது.
மிக நேர்த்தியான கூபே ஸ்டைல் கொண்டு எல்இடி டெயில் லைட் பின்புறத்தில் 470 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ஸ்பேஸ் பாசால்ட் மாடல் பெறுகின்றது.
இன்டீரியரில் மிக நேர்த்தியான ஸ்டைலிங் பெற்ற 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட வசதிகளுடன் 40க்கும் மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களையும் பெறுகின்றது. 7.0 அங்குல டிஜிட்டல் கிளஸ்டர் கொண்டுள்ளது. பின் இருக்கைகளுக்கு தொடையின் கீழ் அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, வயர்லெஸ் போன் சார்ஜர் கொண்டிருப்பதுடன் 6 ஏர்பேக்குகளை அடிப்படையாக கொண்டுள்ளது.
டாடா கர்வ் மாடலுக்கு நேரடியான சவால் விடுக்கும் பாசால்ட் எஸ்யூவி விலை ரூ.10 லட்சத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.