இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆப்பிரிக்க சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மாருதி சுசூகி நிறுவனத்தின் எர்டிகா மாடல் ஒரு நட்சத்திரத்தை மட்டுமே வயது வந்தோர் பாதுகாப்பில் பெற்றுள்ளது.
இந்தியாவில் மாதந்தோறும் பத்தாயிரத்திற்கும் கூடுதலான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்து வருகின்ற இந்த பிரபலமான எம்பிவி ரக மாடல் மிக குறைவான ரேட்டிங்கை மட்டுமே பெற்றுள்ளதால் மிகப்பெரிய அதிர்ச்சியை இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.
GNCAP அறிக்கையில் வயது வந்தோர் பாதுகாப்பில் அதிகபட்சமாக பெற வேண்டிய 34 புள்ளிகளுக்கு 23.63 புள்ளிகளை மட்டுமே பெற்று இருக்கின்றது.
வயது வந்தோருக்கான தலை மற்றும் கழுத்து பாதுகாப்பு நன்றாக இருந்தது. பயணிகளுக்கு மார்பு பாதுகாப்பு நன்றாக இருந்தது மற்றும் ஓட்டுநரின் மார்பு ஓரளவு பாதுகாப்பைப் பெற்றது. மேலும் ஓட்டுனருக்கான கால்களுக்கான பாதுகாப்ப்பு இல்லை. மேலும், இந்த காரின் ஃபுட்வால் பகுதி மிகவும் அன்ஸ்டேபிளாக உள்ளதால் பாதுகாப்பு குறைவாக உள்ளது. அதே நேரத்தில் பாடிசெல் அன்ஸ்டேபிளாக இருக்கின்றது.
குழந்தைகளுக்கான பாதுகாப்பில் பெறவேண்டிய 49 புள்ளிகளுக்கு பதிலாக பெரும் 19.40 புள்ளிகள் மட்டுமே பெற்று இருக்கின்றது. குறிப்பாக ISOFIX குழந்தைகளுக்கான இருக்கையில் ஓரளவு பாதுகாப்பினை வழங்குகின்றது. இதனால் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் வெறும் இரண்டு நட்சத்திரங்களை மட்டுமே மாருதி சுசூகி எர்டிகா பெற்று இருக்கின்றது.