EST 69 எனத் தெரியும் வகையில் 1969 ஆம் ஆண்டு வெளியான யெஸ்டி பைக்கை குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் அட்வென்ச்சர் மாடல் ஆனது மேம்படுத்தப்பட்ட எஞ்சின் மற்றும் புதிய நிறங்களை பெறுவது உறுதியாகி உள்ளது.
2024 Yezdi Adventure
தற்பொழுது உள்ள அட்வென்ச்சர் மாடலின் பவர் மற்றும் டார்க்கில் பெரிதாக எந்த ஒரு மாற்றங்களும் இருக்காது ஆனால் என்ஜின் உடைய உட்புற பாகங்கள் பல்வேறு மாற்றங்கள் பெறப்பட்டு மேலும் சிறப்பான ரைடிங் அனுபவத்தை வெளிப்படுத்த வகையிலான அமைப்பினை கொடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் யெஸ்டி வெளியிட்ட டீசரில் புதிய எஞ்சின் என குறிப்பிட்டு இருக்கின்றது. எனவே மிக முக்கியமான சில மாற்றங்கள் ஆனது இந்த என்ஜினில் எதிர்பார்க்கலாம்.
334சிசி, சிங்கிள்-சிலிண்டர், DOHC, லிக்விட் கூல்டு எஞ்சின் பெற்று 8000 RPM-ல் 30.2 PS மற்றும் 6500 RPM-ல் 29.9 Nm டார்க் வழங்குவதுடன் இந்த மாடலில் 6-ஸ்பீடு டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.
முன்புறத்தில் 21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் 17 அங்குல வீல் கொண்டுள்ள யெஸ்டி அட்வென்ச்சரில் முன்புறம் 41 மிமீ டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் 7-ஸ்டெப் ப்ரீ-லோட் அட்ஜஸ்ட்மென்டுடன் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெறுகின்றது. இரு டயரிலும் டிஸ்க் பிரேக்கு உடன் இரட்டை சேனல் ஏபிஎஸ் கொண்டிருக்கும்.
ஜூலை 31 ஆம் தேதி 2024 யெஸ்டி அட்வென்ச்சர் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.