2024 புசான் சர்வதேச மோட்டார் ஷோவில் ஜூன் 27 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள கேஸ்பெர் சிறிய எஸ்யூவி அடிப்படையிலான ஹூண்டாயின் இன்ஸ்டெர் e-SUV மாடலின் ரேஞ்ச் 355 கிமீ வழங்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வருமா என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.
கேஸ்பெர் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள Inster எலக்ட்ரிக் எஸ்யூவி சிறிய அளவிலான ஸ்டைலிங் மாறுபாடுகளை கொண்டதாகவும், எல்இடி ஹெட்லைட் டிசைன் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டதாகவும், இன்டிரியரில் சிறிய அளவிலான மாற்றங்கள் கொண்டிருக்கலாம்.
எவ்விதமான தொழிற்நுட்ப விபரங்களை அறிவிக்கவில்லை என்றாலும் இந்த ரேஞ்ச் 355 கிமீ வரை வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தியுள்ளது. துவக்க நிலை சந்தைக்கு ஏற்ற மாடலாக விளங்குகின்ற இன்ஸ்டெர் பற்றி முழுமையான விபரங்கள் ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை கொரியாவில் நடைபெறுகின்ற புசான் மோட்டார் ஷோவில் வெளியிடப்பட உள்ளது. நிலையில் விற்பனைக்கு தென்கொரியாவில் முதற்கட்டமாக கிடைக்க உள்ளது.
அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு செய்ய உள்ள இன்ஸ்டர் இந்திய சந்தைக்கு எக்ஸ்டரின் அடிப்படையில் வரக்கூடும் என எதிர்பார்க்கலாம். 2025 ஆம் ஆண்டில் முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி கிரெட்டா வெளியிடப்பட உள்ள நிலையில் இந்திய சந்தையில் அடுத்தடுத்து பல்வேறு மாடல்களை கொண்டு வரவுள்ளது.