ஹோண்டா நிறுவனத்தின் முந்தைய தலைமுறை அக்கார்டு, சிவிக், ஜாஸ், சிட்டி, மற்றும் சிஆர்-வி கார்களில் ஏர்பேக் இன்பிளேடர் பிரச்சனையின் காராணமாக 1,90,578 கார்களை இந்தியாவில் திரும்ப அழைக்க ஹோண்டா முடிவெடுத்துள்ளது.
உலக அளவில் தக்தா காற்றுப்பை பிரச்சனையின் காரணமாக எண்ணற்ற கார்கள் பல நிறுவனங்களின் சார்பாக திரும்ப அழைக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ள கார்களில் பாதிப்புள்ள அனைத்து கார்களும் அதாவது 1,90,578 கார்களை திரும்ப அழைத்து டீலர்கள் வாயிலாக இலவசமாக மாற்றித் தரப்பட உள்ளது.
டீலர்கள் வாயிலாக நேரடியாக தொடர்புகொள்ள உள்ள நிலையில் உங்களுடைய வாகனம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிய ஹோண்டா நிறுவனத்தின் அலுவல் இணையத்தினை அனுகிய உங்கள் வாகனத்தின் வின்(VIN) எண் எனப்படும் வாகன அடையாள எண்னை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம். சிஆர்-வி மற்றும் சிவிக் போன்ற கார்க்கள் உடனடியாகவும் மற்றவை விரைவிலும் திரும்ப அழைக்கப்பட உள்ளது.