ஸ்கார்ப்பியோ என் மற்றும் கிளாசிக் என இரு மாடல்களுக்கும் மொத்தமாக மாதந்தோறும் 17,000 முன்பதிவுகளை பெற்று வருகின்றது.
தார் எஸ்யூவி மாடல் 59,000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளை கொண்டுள்ள நிலையில் மாதந்தோறும் 7,000க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்று வருகின்றன. அடுத்து, எக்ஸ்யூவி 700 எஸ்யூவி மொத்தமாக 16,000 ஆர்டர்களை பெற்றுள்ள நிலையில் மாதந்தோறும் 8,000 முன்பதிவுகளை குவித்து வருகின்றது.
பொலிரோ, பொலிரோ நியோ என இரு மாடல்களும் 10,000 க்கு மேற்பட்ட ஆர்டர்களை பெற்றுள்ளது.
உற்பத்தியை அதிகரிக்கும் மஹிந்திரா
தற்பொழுது உள்ள உற்பத்தி எண்ணிக்கையை அதிகரிக்க மஹிந்திரா பல்வேறு முதலீடு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. குறிப்பாக தற்பொழுது மாதந்தோறும் 49,000 யூனிட்டுகளை தயாரிக்கும் திறனை பெற்றுள்ளது.
இதனை FY25 ஆண்டின் இறுதிக்குள் 64,000 ஆக உயர்த்தவும், இதில் 5,000 வரை எஸ்யூவி மாடல்களும், 10,000 வரை எலக்ட்ரிக் கார்களும் அடங்கும். FY2026 ஆம் நிதியாண்டின் இறுதிக்குள் மாதந்திர உற்பத்தியை 72,000 யூனிட்டுகளாக உயர்த்தும் பொழுது ஆண்டுக்கு 864,000 யூனிட்டுகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் 9 ICE எஸ்யூவி, 7 Born Electric எஸ்யூவி மற்றும் 7 இலகுரக வர்த்தக வாகனங்களை விற்பனைக்கு வெளியிட மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக எலக்ட்ரிக் வாகன சந்தையில் முதல் BE எஸ்யூவி மாடலை அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியிட வாய்ப்புள்ளது.
இது தவிர மஹிந்திரா XUV700 மாடலை அடிப்படையாக கொண்ட XUV.e8 மற்றும் XUV.e9 கூபே ஆகிய மாடல்களும் சந்தைக்கு வரவுள்ளது. குறிப்பாக வரவுள்ள மஹிந்திரா இ-எஸ்யூவி மாடல்களில் 60-80kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு 450-600 கிமீ ரேஞ்ச் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உற்பத்தியை அதிகரிக்க புதிய மாடல்களை வெளியிட என மொத்தமாக ரூ.27,000 கோடி முதலீட்டை மஹிந்திரா வரும் ஆண்டுகளில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த முதலீட்டில் 12,000 கோடி எலக்ட்ரிக் வாகனங்களுக்கும், 14,000 கோடி ICE எஸ்யூவி, LCV மாடல்களுக்கும், மற்ற முதலீடுகள் ரூ.1000 கோடியாகும்.