பஜாஜ் ஆட்டோவின் 11வது மாடலாக பல்சர் வரிசையில் வந்துள்ள NS400Z உட்பட மற்ற NS125, NS160, NS200 என நான்கு மாடல்களை ஒப்பீடு செய்து வித்தியாசங்கள் முக்கிய வசதிகள் உட்பட தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலையை அறிந்து கொள்ளலாம்.
நேக்டூ ஸ்போர்ட் ரக பைக்குகளில் பொதுவாக பெரிமீட்டர் ஃபிரேம் பயன்படுத்தப்பட்டு NS125, NS160, மற்றும் NS200 என மூன்றும் ஏறக்குறைய ஒரே மாதிரியான ஒற்றுமையை கொண்டிருக்கும் நிலையில் NS400Z மாடலும் ஒரே மாதிரியாக அமைந்திருந்தாலும் சிறிய மாற்றத்தை ஹெட்லைட் உட்பட சில இடங்களில் பெற்றுள்ளது.
ஏற்கனவே நாம் என்எஸ்200 மாடலுக்கு எதிராக என்எஸ்400இசட் ஒப்பீட்டை அறிந்து கொண்ட நிலையில் நான்கு பைக்குகளுக்கு இடையில் உள்ள வித்தியாசங்களை பார்க்கலாம்.
Pulsar NS400Z | Pulsar NS200 | Pulsar NS160 | Pulsar NS125 | |
என்ஜின் | 373cc single cyl liquid cooled | 199.5cc single cyl, liquid cooled | 160.3cc single cyl, air oil cooled | 124.45cc single cyl, Air cooled |
பவர் | 40 Ps | 24.5 Ps | 17.2 Ps | 12 Ps |
டார்க் | 35Nm | 18.74Nm | 14.6 Nm | 11Nm |
கியர்பாக்ஸ் | 6 speed | 6 speed | 5 Speed | 5 Speed |
மைலேஜ் | 28 kmpl | 38 kmpl | 44 kmpl | 51kmpl |
என்ஜின் ஒப்பீட்டை தொடர்ந்து மற்ற மெக்கானிக்கல் சார்ந்த சஸ்பென்ஷன், பிரேக்கிங் உட்பட அனைத்தும் அறிந்து கொள்ளலாம்.
Pulsar NS400Z | Pulsar NS200 | Pulsar NS160 | Pulsar NS125 | |
முன்பக்க சஸ்பென்ஷன் | 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க் | அப்சைடு டவுன் ஃபோர்க் | அப்சைடு டவுன் ஃபோர்க் | டெலிஸ்கோபிக் ஃபோர்க் |
பின்புறம் சஸ்பென்ஷன் | மோனோஷாக் | மோனோஷாக் | மோனோஷாக் | மோனோஷாக் |
டயர் முன்புறம் | 110/70-17 | 100/80-17 | 100/80-17 | 80/100-17 |
டயர் பின்புறம் | 140/70-17 | 130/70-17 | 130/70-17 | 100/90-17 |
பிரேக் முன்புறம் | 320mm டிஸ்க் | 300mm டிஸ்க் | 300mm டிஸ்க் | 240mm டிஸ்க் |
பிரேக் பின்புறம் | 230mm டிஸ்க் | 230mm டிஸ்க் | 230mm டிஸ்க் | 130mm டிரம் |
வீல்பேஸ் | 1344mm | 1363mm | 1372mm | 1353mm |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 168mm | 168mm | 170mm | 179mm |
எடை | 174 KG | 158 KG | 152kg | 144kg |
எரிபொருள் டேங்க் கொள்ளளவு | 12 லிட்டர் | 12 லிட்டர் | 12லிட்டர் | 12லிட்டர் |
இருக்கை உயரம் | 807mm | 805mm | 805mm | 805mm |
பிரேக்கிங் அமைப்பில் என்எஸ்125 மட்டும் கம்பைன்டு பிரேக்கிங் சிஸ்டம் பெறுகின்றது. மற்ற மூன்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது. குறிப்பாக டிஜிட்டல் கிளஸ்ட்டர் வசதியில் மற்ற மூன்றை விட பல்சர் என்எஸ்400இசட் வித்தியாசப்படுகின்றது.
Bajaj Pulsar NS400Z Vs NS200 Vs NS160 Vs NS125 ஆன்ரோடு விலை ஒப்பீடு
எக்ஸ்ஷோரூம் | ஆன்ரோடு | |
Pulsar NS400Z | ₹ 1.85 லட்சம் | ₹ 2.29 லட்சம் |
Pulsar NS200 | ₹ 1.58 லட்சம் | ₹ 1.83 லட்சம் |
Pulsar NS160 | ₹ 1.47 லட்சம் | ₹ 1.72 லட்சம் |
Pulsar NS125 | ₹ 1.09 லட்சம் | ₹ 1.29 லட்சம் |
இங்கே கொடுக்கப்பட்டுள்ள பல்சர்களில் என்எஸ்125, என்எஸ்160 ஒரே மாதிரியான வசதிகளுடன் என்எஸ்200 போலவே டிசைன் பெற்றுள்ளது. ஆனால் என்எஸ்400z ஹெட்லைட் அமைப்பில் சிறிய மாற்றத்துடன் குறைந்த வீல்பேஸ் ரைடிங் மோடுகள் அதிகபட்ச வேகம் 160 கிமீ வரை எட்டும் திறனுடன் மலிவு விலையில் கிடைக்கின்ற 400சிசி மாடலாகும்.