இந்தியாவில் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்ற ஃபோர்ஸ் கூர்க்கா (Force Gurkha) எஸ்யூவி மாடலில் எதிர்பார்க்கப்படுகின்ற முக்கிய வசதிகளை பற்றி தொகுத்து அறிந்து கொள்ளலாம். 3 டோர் மற்றும் 5 டோர் பெற்ற மாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளதால் இம்மாத இறுதிக்குள் சந்தைக்கு வரக்கூடும்.
முன்பாக 3 கதவுகள் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள 5 கதவுகளை கொண்ட மாடலின் டீசரும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் கொண்டதாக அமைந்துள்ளது.
முன்பக்க தோற்ற அமைப்பில் மிக நேர்த்தியாக அமைந்துள்ள எஸ்யூவி மாடலில் முன்பக்க கிரிலில் Gurkha என்ற பெயர் பெரிதாக எழுதப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் ஒரே மாதிரியாக அமைந்திருக்கின்றது. முன்பக்க பம்பர் மற்றும் பின்பக்கத்தில் உள்ள பம்பரில் சிறிய மாற்றங்களை கொண்டிருக்கும். மேலும் டீசர் மூலம் தொடர்ந்து 16 அங்குல புதிய டிசைன் பெற்ற அலாய் வீல் (245/70 R16) கொண்டுள்ளது.
3 கதவுகளை பெற்ற கூர்க்கா மாடலில் 4 இருக்கைகளும், 5 கதவுகளை பெற்ற கூர்க்காவில் 5. 6, மற்றும் 7 இருக்கை என மூன்று விதமான ஆப்ஷனும் கிடைக்க உள்ளது. பல்வேறு மேம்பாடுகளை கொண்ட இன்டிரியரில் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் கூடுதலாக தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
முன்பாக கிடைத்து வருகின்ற மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்தின் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக 91hp, மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இதே எஞ்சினை இரண்டு மாடல்களும் பகிர்ந்து கொள்ள உள்ளது. கூடுதலாக shift-on-the-fly 4WD பெற உள்ளது.
இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற மஹிந்திரா தார், 5 கதவுகளை பெற்ற மாருதி சுசூகி ஜிம்னி மற்றும் வரவிருக்கும் 5-டோர் மஹிந்திரா தார் அர்மடா ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ளது. புதிய ஃபோர்ஸ் மோட்டார்சின் கூர்க்கா 3 டோர் விலை ரூ.16 லட்சத்துக்குள் துவங்கலாம்.
[wpdiscuz-feedback id=”ntoxs506y2″ question=”Please leave a feedback on this” opened=”1″][/wpdiscuz-feedback]