சிறப்பான மைலேஜ் இந்த ஸ்கூட்டருக்கு தேர்வு செய்ய மிக முக்கியமான காரணமாக அமைந்திருக்கின்றது. அடுத்தபடியாக ,விலை குறைவான மாடல் மற்றும் பல்வேறு மாறுபட்ட நிறங்கள், டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் யமஹா Y கனெக்ட் வசதி போன்றவை எல்லாம் இந்த மாடல் பெற்றிருக்கின்றது குறிப்பாக இந்த ஸ்கூட்டரின் இருக்கை அடிப்பகுதியில் உள்ள ஸ்டோரேஜ் 21 லிட்டர் மட்டுமே கொண்டிருப்பதாக இருந்தாலும், ஒரு முழுமையான ஹெல்மெட்டை வைக்க ஏதுவாக அமைந்திருக்கின்றது.
2024 Yamaha Fascino 125 Fi Hybrid | |
என்ஜின் (CC) | 125 cc |
குதிரைத்திறன் (bhp@rpm) | 8.2 bhp @ 6500 rpm |
டார்க் (Nm@rpm) | 10.3 Nm @ 5000 rpm |
கியர்பாக்ஸ் | CVT |
மைலேஜ் | 55 Kmpl |
பெண்கள் பெரிதும் விரும்பும் வகையில் ரெட்ரோ டிசைனை கொண்டு இருக்கின்ற Fascino ஸ்கூட்டரை பொறுத்தவரை மிக சிறப்பான ரைடிங் அனுபவத்தை வழங்குகின்றது. ஃபேசினோ ஸ்கூட்டருக்கு மாற்றாக சந்தையில் டிவிஎஸ் ஜூபிடர் 125, ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125, சுசூகி ஆக்செஸ் 125 மற்றும் ஹோண்டா ஆக்டிவா 125 உள்ளன.
2024 யமஹா ஃபேசினோ 125 ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்ரோடு விலை ₹ 1,05,045 முதல் ₹ 1,18,856 வரை ஆகும்.
ஃபேசினோ போல அல்லாமல் மாறுபட்ட இளைய தலைமுறையினர் விரும்பும் ஸ்போர்ட்டிவ் டிசைன் பெற்ற ரே இசட்ஆர் 125 Fi ஹைபிரிட் மாடலும் ஃபேசினோ 125 எஞ்சினை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த மாடலில் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் என இரு ஆப்ஷனை கொண்டு எல்இடி ஹெட்லேம்ப் பெற்றுள்ளது.
டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் யமஹா Y கனெக்ட் வசதி போன்றவை பெறுள்ள ஸ்கூட்டரில் இருக்கை அடிப்பகுதியில் உள்ள ஸ்டோரேஜ் 21 லிட்டர் மட்டுமே கொண்டிருக்கின்றது. 99 கிலோ எடை மட்டுமே கொண்டுள்ளதால் இலகுவாக கையாள முடிகின்றது.
2024 Yamaha Ray ZR 125 Fi Hybrid | |
என்ஜின் (CC) | 125 cc |
குதிரைத்திறன் (bhp@rpm) | 8.2 bhp @ 6500 rpm |
டார்க் (Nm@rpm) | 10.3 Nm @ 5000 rpm |
கியர்பாக்ஸ் | CVT |
மைலேஜ் | 52 Kmpl |
ரே ZR 125 ஸ்கூட்டருக்கு மாற்றாக டிவிஎஸ் என்டார்க் 125, சுசூகி அவெனிஸ் 125, சுசூகி பர்க்மேன் ஸ்டீரிட் ஆகியவை இடம்பெற்றுள்ளது. ஸ்போர்ட்டிவ் ஸ்டைல் மற்றும் குறைந்த விலை இந்த ஸ்கூட்டருக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக உள்ளது.
இளம் தலைமுறையினரை கவரும் வகையிலான வடிவமைப்பை கொண்டிருக்கின்ற ரே இசட் ஆர் 125 மாடல் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஸ்டைலிசான பாடி கிராபிக்ஸ் பெரும்பாலும் அனைவரையும் கவருகின்றது.
நகர்ப்புற பயணங்களுக்கு ஏற்ற வகையில் உள்ள இந்த ஸ்போர்ட்டிவ் ஆன ஸ்கூட்டர் அதே நேரத்தில் நெடுஞ்சாலை பயணங்களில் எப்பொழுதாவது பயன்படுத்த ஏதுவாக அமைந்திருக்கின்றது
2024 யமஹா ரே ZR 125 Fi ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,08,985 முதல் ₹ 1,16,556 வரை ஆகும்.
ரே இசட்ஆர் 125 Fi ஹைபிரிட் மாடலில் உள்ள அனைத்து அம்சங்களுடன் மாறுபட்ட பாடி கிராபிக்ஸ் பெற்று டிஸ்க் பிரேக் கொண்டதாக அமைந்துள்ள ஸ்கூட்டரில் 125cc எஞ்சினை பகிர்ந்து கொள்ளுகின்றது.
2024 Yamaha Ray ZR Street Rally 125 Fi Hybrid | |
என்ஜின் (CC) | 125 cc |
குதிரைத்திறன் (bhp@rpm) | 8.2 bhp @ 6500 rpm |
டார்க் (Nm@rpm) | 10.3 Nm @ 5000 rpm |
கியர்பாக்ஸ் | CVT |
மைலேஜ் | 52 Kmpl |
ரே இசட்ஆர் 125 மற்றும் ஸ்டீரிட் ரேலி 125 என இரு மாடல்களுக்கும் அடிப்படையான கட்டுமானத்தில் எந்த வித்தியாசமும் இல்லாமல், சிறிய அளவிலான பாடி கிராபிக்ஸ் மற்றும் ஸ்டைலிங் அம்சங்கள் மாறுபட்டுள்ளது. இந்த மாடலில் யமஹா மோட்டோஜிபி எடிசனும் உள்ளது.
2024 யமஹா ரே ZR ஸ்டீரிட் ரேலி 125 Fi ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,18,985 முதல் ₹ 1,21,556 வரை ஆகும்.
மேக்சி ஸ்டைல் ஸ்போர்டிவ் மாடலாக விளங்குகின்ற ஏரோக்ஸ் 155cc மாடல் பொறுத்தவரை நாம் சொல்ல வேண்டும் என்றால் மிக நேர்த்தியான வடிவமைப்பை கொண்டு இளைய தலைமுறையினரை வெகுவாக கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள எஞ்சின் பிரபலமான R15 v4 மற்றும் MT-15 போன்ற பைக் களில் இடம் பெற்று இருக்கின்ற 155 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் ஆகும்.
60 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் சிறப்பான மைலேஜ் Aerox 155cc மாடலானது வழங்குகின்றது குறிப்பாக, சொல்ல வேண்டும் என்றால் 45 கிலோமீட்டருக்கு கூடுதலாக இந்த மாடல் வழங்குகின்றது. சற்று கூடுதலான வேகத்தில் பயணிப்பவர்கள் 40 கிலோமீட்டர் வரை மைலேஜ் பெறுகின்றார்கள்.
2024 Yamaha Aerox 155 | |
என்ஜின் (CC) | 155 cc liquid cooled |
குதிரைத்திறன் (bhp@rpm) | 15 bhp @ 8000 rpm |
டார்க் (Nm@rpm) | 13.9 Nm @ 6500 rpm |
கியர்பாக்ஸ் | CVT |
மைலேஜ் | 42-45 Kmpl |
ஸ்போட்டிவான லுக், பெர்ஃபார்மன்ஸ் இஞ்சின் தாராளமான ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இருக்கைக்கு அடியில் 24.5 லிட்டர் கொள்ளளவு வழங்கியுள்ளது. டிராக்ஷன் கண்ட்ரோல், யமஹா Y – கனெக்ட் வசதியுடன் டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் ஏபிஎஸ் உள்ளது.
ப்ளோர் போர்டு ஸ்பேஸ் ஆனது இந்த ஸ்கூட்டருக்கு கிடையாது அதேபோல பிரேக்கிங் அமைப்பு பணத்தை சற்று மேம்படுத்தப்பட்டதாக இருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும் எனக்கு கருதப்படுகின்றது ஒட்டுமொத்தத்தில் இது ஒரு சிறப்பான ஸ்போர்ட்டிவ் திறன் கொண்ட ஸ்கூட்டர் ஆகும். யமஹா மோட்டோஜிபி எடிசனும் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரின் போட்டியாளர்கள் ஏப்ரிலியா SR160, SXR 160 போன்றவை உள்ள நிலையில் ஹீரோ ஜூம் 160 வரவுள்ளது.
2024 யமஹா Aerox 155cc ஸ்கூட்டரின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை ₹ 1,85,522 – ₹ 1,86,743 ஆகும்.
கொடுக்கப்பட்டுள்ள யமஹா ஸ்கூட்டர்களின் ஆன்ரோடு விலை தோராயமானதாகும்.