ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் வரிசையில் 650சிசி எஞ்சின் பெற்ற கிளாசிக் மற்றும் புல்லட் என இரண்டும் தொடர் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தி வருகின்றது. விற்பனையில் கிடைக்கின்ற 350சிசி மாடல்களின் அடிப்படையிலான வடிவமைப்பினை பகிர்ந்து கொள்ள உள்ள இரு மாடல்களும் விற்பனைக்கு அடுத்த சில மாதங்களுக்கு பிறகு எதிர்பார்க்கப்படுகின்றது.
சந்தையில் உள்ள 650சிசி எஞ்சின் பெற்ற ராயல் என்ஃபீல்டின் சூப்பர் மீட்டியோர், இண்டர்செப்டார், கான்டினென்டினல் ஜிடி மற்றும் ஷாட்கன் 650ல் கிடைத்து வருகின்றது. இதே எஞ்சின் வரவுள்ள இரு மாடல்களும் பயன்படுத்திக் கொள்ள உள்ளது.
648cc பேரல் ட்வின் எஞ்சின் அதிகபட்சமாக 47 hp பவரை 7100 RPM-ல் வழங்குவதுடன், 4000 RPMல் அதிகப்படியான 52 Nm டார்க்கினை வழங்குகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப் அசிஸ்ட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க – 650சிசி ராயல் என்ஃபீல்டு பைக் ஆன்-ரோடு விலை பட்டியல்
கிளாசிக் 650 மற்றும் புல்லட் 650
கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை வழங்கி வரும் நிலையில் இதன் அடிப்படையில் ஸ்டைலிஷான மாற்றங்களுடன் கூடுதலாக சிறிய பிரீமியம் வசதிகளை பெற்றதாக அமைந்திருக்கலாம்.
மற்றபடி, புதிதாக வந்த புல்லட் 350 தோற்ற அமைப்பபில் கிளாசிக் போல ஒரே மாதிரியாக அமைந்திருப்பதுடன் சிறிய மாற்றங்களாக ஒற்றை இருக்கை உட்பட பக்கவாட்டு பாக்ஸ் பேனல்கள் வேறுபடுத்தி கொடுக்கப்படுவதுடன் லோகோ மற்றும் பேட்ஜிங் முறையில் ரெட்ரோ அமைப்பினை பெற்றிருக்கலாம்.
இரண்டு மாடல்களும் நடப்பு ஆண்டின் இறுதி அல்லது அடுத்த ஆண்டின் துவக்க மாதங்களில் சந்தையில் கிடைக்க துவங்கலாம்.
650 வரிசையில் ஸ்கிராம்பளர் உட்பட அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் என பல்வேறு மாடல்களை ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது.