எம்ஜி மோட்டாரின் இசட்எஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி (MG ZS EV) மாடலின் வேரியண்ட் பெயர் மாற்றப்பட்டிருப்பதுடன் கூடுதலாக Excite Pro என்ற வேரியண்ட் ரூ.19.98 லட்சத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
2024 MG ZS EV
புதுப்பிக்கப்பட்ட வேரியண்ட் வரிசையின் படி ZS EV காரில் Executive, Excite Pro, Exclusive Plus, மற்றும் Essence என நான்கு விதமான வேரியண்டுகள் கிடைக்க துவங்கியுள்ளது.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Excite Pro வேரியண்டில் பனரோமிக் சன்ரூஃப், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே, 6 ஸ்பீக்கருடன் ஜேபிஎல் ஆடியோ சிஸ்டம் உள்ளது.
25.7cm HD தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 75+ இணைக்கப்பட்ட கார் அம்சங்களுடன் i-SMART 2.0, டிஜிட்டல் கீ, லெதர் சுற்றப்பட்ட ஸ்டீயரிங், வெள்ளி நிற ரூஃப் ரெயில்கள் பெற்றுள்ளன.
ZS EV மின்சார கார் நுட்பவிபரங்கள்
பொதுவாக அனைத்து வேரியண்டிலும் 50.3kWh பேட்டரி பேக்குடன் 461km ரேஞ்ச் வெளிப்படுத்தும் ZS EV மின்சார கார் அதிகபட்சமாக 176hp மற்றும் 353Nm டார்க் வழங்குகின்றது.
இந்த மாடலில் முன்புறம் பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் மூலம் செயல்படுத்தப்படுகின்றது.
0-100% பேட்டரியை சார்ஜ் செய்ய 7.4kW AC சார்ஜிங் மூலம் 8.5 முதல் 9 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளுகின்றது.
அடுத்து விரைவு சார்ஜிங் முறையிலான 50kW CCS சார்ஜிங் மூலம் 1 மணி நேரத்தில் 0- 80 % சார்ஜிங் பெற முடியும்.
சிறப்பு அம்சங்களாக டிஜிட்டல் கீ, 10.11 இன்ச் HD தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் பேன் பனோரமிக் ஸ்கை ரூஃப் உள்ளது.
பின் பார்க்கிங் சென்சார் கொண்ட 360 டிகிரி கேமரா போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன், 6 காற்றுப்பை ஹில் டிசென்ட் கண்ட்ரோல் (HDC) போன்ற பிற அம்சங்களையும் பெறுகிறது.
MG ZS EV on road price
எம்ஜி இசட்எஸ் இவி விலை ரூ.18,98,000 லட்சம் முதல் ரூ.25,08,000 லட்சம் வரை எக்ஸ்ஷோரூம் விலை உள்ளது.
MG ZS EV | Ex-showroom Price | on-road Price |
---|---|---|
ZS EV Executive | ₹ 18,98,000 | ₹20,18,463 |
ZS EV Excite Pro | ₹ 19,98,000 | ₹ 21,22,543 |
ZS EV Exclusive Plus (Grey Interior) | ₹ 23,98,000 | ₹ 25,41,604 |
ZS EV Exclusive Plus (Ivory Interior) | ₹ 24,08,000 | ₹ 25,52,354 |
ZS EV Essence (Grey Interior) | ₹ 24,98,000 | ₹ 26,45,543 |
ZS EV Essence (Ivory Interior) | ₹ 25,08,000 | ₹ 26,56,680 |
(All price Tamil Nadu)
கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலை தோராயமானதாகும்.