பிஎம்டபுள்யு மோட்டார்டு நிறுவனத்தின் மிக குறைவான முதல் மோட்டார்சைக்கிளாக வரவுள்ள ஜி310 ஆர் பைக்கினை பிரபலப்படுத்தும் நோக்கில் ரைடர்ஸ் இன் தி ஸ்ட்ரோம் (Riders in the Storm) என்ற காமிக்ஸ் நாவல் ஒன்றை வருகின்ற அக்டோபர் 2016 யில் வெளியிட உள்ளது.
டிவிஎஸ் மற்றும் பிஎம்டபுள்யு கூட்டணியில் அமைந்த முதல் மோட்டார்சைக்கிளாக வந்துள்ள ஜி 310 ஆர் பைக்கின் பிரபலப்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட உள்ள கிராபிக்ஸ் காமிக் நாவில் மோட்டார்சைக்கிள் சந்தையில் நிலைத்து நிற்கும் மாடலாக ஜி310 ஆர் நிலைநிறுத்த திட்டமிட்டு வருகின்றது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தன்னுடைய மோட்டார்சைக்கிள்களை பிரபலப்படுத்தியதை போல காமிக்ஸ் துறையில் 15 வருட அனுபவ மிக்கவரான இத்தாலியின் ரிகார்டோ பெர்ச்சியாலி என்ற கலைஞரை கொண்டு உருவாக்க உள்ளது. மேலும் ரிகார்டோ டிசி காமிக்ஸ் , மார்வெல் மற்றும் டார்க் ஹவுஸ் போன்ற முன்னனி காமிக்ஸ் நிறுவனங்களில் பணியாற்றியவர் ஆவார். மேலும் இவர் ஆர்வமிக்க பைக் ரைடர் ஆவார்.
அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு வரவுள்ள பிஎம்டபுள்யூ G310 R பைக்கின் விலை ரூ.2.00 லட்சத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதால் தொடக்க நிலையில் உள்ள ஸ்டீரிட் ஃபைட்டர் பைக்குகளுக்கு கடுமையான நெருக்கடியை தரவல்ல மாடலாக G310 R ஸ்போர்ட்டிவ் நேக்டு பைக் விளங்கும்.
ஜெர்மனி நாட்டில் நடந்து வரும் ஜூன் 24 முதல் 26 வரையிலான காமிக் கான் அரங்கில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு மற்றும் பான்னி இணைந்து ரைடர்ஸ் இன் தி ஸ்ட்ரோம் (Riders in the Storm) கிராபிக்ஸ் காமிக் நாவலை காட்சிப்படுத்தியுள்ளது. வருகின்ற அக்டோபர் மத்தியில் வெளியிடப்பட உள்ளதால இதே காலகட்டத்தில் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் பைக் விற்பனைக்கு வரும்.