61.44kWh மற்றும் 82.56kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற்றதாக வந்துள்ள BYD சீல் எலக்ட்ரிக் செடானின் விலை ரூ.41 லட்சம் முதல் ரூ.53 லட்சம் வரை விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.
பிஓய்டி சீல் முக்கிய விபரம்;
- துவக்க நிலை 61.44kWh பேட்டரி பேக் கொண்டு 204hp மற்றும் 310Nm டார்க் வழங்குகின்றது. இதன் ரேஞ்ச் 510 கிமீ (NEDC cycle) ஆகும்.
- RWD 82.56kWh பேட்டரி பேக்கில் 312hp மற்றும் 360Nm டார்க் வழங்குகின்றது. இதன் ரேஞ்ச் 650 கிமீ (NEDC cycle) ஆகும்.
- AWD இரு அச்சிலும் தலா ஒரு மோட்டாரை பெற்று 530hp மற்றும் 670Nm டார்க் உற்பத்தி செய்கின்றது.
- 0-100kmph வேகத்தை எட்ட 3.8 வினாடிகளை ஆல் வீல் டிரைவ் மாடல் கொண்டுள்ளது.
- முழுமையான சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் வரம்பு 700 கிமீ (CLTC)
- Seal காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆகும்.
- 150kW விரைவு சார்ஜரை ஆதரிக்கின்ற ‘Blade Battery’ டெக்னாலஜி பெறுகின்றது.
BYD நிறுவனம் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,60,000 கிமீ வாரண்டியையும், மோட்டார் மற்றும் மோட்டார் கன்ட்ரோலருக்கு 8 ஆண்டுகள் அல்லது 1,50,000 கிமீ வாரண்டியையும் வழங்குகிறது.
Variant | Ex-showroom price |
Dynamic 61.44kWh | Rs. 41,00,000 |
Premium 82.56kWh | Rs. 45,55,000 |
Performance 82.56kWh AWD | Rs. 53,00,000 |