குறைவான சுற்றுச்சூழல் மாசு மற்றும் சிறப்பான மைலேஜ் வழங்குகின்ற சிஎன்ஜி எரிபொருள் மூலம் இயங்குகின்ற டாடா நெக்ஸான் சிஎன்ஜி விற்பனைக்கு அடுத்த மாதம் மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பாரத் மொபைலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட நெக்ஸானின் மூலம் முதன்முறையாக இந்திய சந்தையில் டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்ற முதல் சிஎன்ஜி மாடலாக வரவுள்ளது.
தோற்ற அமைப்பில் தற்பொழுது விற்பனையில் உள்ள நெக்ஸானை போலவே அமைந்துள்ள Nexon iCNG பேட்ஜ் மட்டும் பெற்று 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது மேனுவல் உட்பட ஏஎம்டி என இரண்டிலும் சிஎன்ஜி வரக்கூடும். தற்பொழுது பவர் மற்றும் மைலேஜ் தொடர்பான எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை.
குறிப்பாக தனது கார்களில் பொதுவாக ட்வீன் சிலிண்டர் என்ஜின் ஆனது பின்புறத்தில் உள்ள பூட் பகுதியில் பொருத்தப்பட்டு பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி என இரண்டிலும் ஸ்டார்ட் செய்யும் வகையில் அமைந்து பூட் ஸ்பேஸ் இடவசதியும் வழங்கப்பட்டுள்ளது.
டாடா நெக்ஸான் ஆனது பெட்ரோல், டீசல் மற்றும் எலக்ட்ரிக் வரிசையில் கிடைக்கும் நிலையில் கூடுதலாக ஐ-சிஎன்ஜி மாடலும் இந்நிறுவனத்துக்கு மிகப்பெரிய பலமாகவும் 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள சந்தையில் முதன்மையான மாடலாகவும் விளங்கி வருகின்றது.
இந்த பிரிவில் ஏற்கனவே, மாருதி பிரெஸ்ஸா எஸ்-சிஎன்ஜி ஆப்ஷனில் விற்பனையில் கிடைத்து வருகின்றது.
சமீபத்தில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி 2023 ஆம் ஆண்டில் 1.80 லட்சம் சிஎன்ஜி வாகனங்கள் விற்பனை ஆகி முந்தைய காலண்டர் வருடத்தை விட 53 % வளர்ச்சி அடைந்துள்ளது.
சமீபத்தில் இந்தியாவின் முதல் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற டிகோர் மற்றும் டியாகோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.