ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ள புதிய கவாஸாகி எலிமினேட்டர் 400 பைக்கில் கூடுதலாக நிற மாற்றங்களை பெற்று கூடுதல் வசதிகள் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் விற்பனைக்கு மார்ச் 2024 ஜப்பானிலும், மற்ற நாடுகளில் அடுத்த சில மாதங்களுக்கு பிறகு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய 398சிசி பேரலல் ட்வின் சிலிண்டர் எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது. 10,000ஆர்பிஎம்-ல் 48bhp பவரையும், 8,000ஆர்பிஎம்-ல் 37 Nm டார்க்கை உற்பத்தி செய்வதுடன் ஆறு வேக கியர்பாக்ஸுடன் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச்சை 2024 கவாஸாகி எலிமினேட்டர் 400 பெறுகிறது.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் இரட்டை பின்புற ட்வீன் ஷாக் அப்சார்பர் டிரெல்லிஸ் ஃபிரேம் பெற்று இதன் பிரேக்கிங் அமைப்பில் 310 மிமீ டிஸ்க் மற்றும் 240 மிமீ பின்புற டிஸ்க் உள்ளது. 18 அங்குல முன்புற வீல் மற்றும் 16 அங்குல பின்புற அலாய் பெற்றதாக உள்ளது.
எலிமினேட்டர் 400 க்ரூஸர் பைக்கில் ஸ்டாண்டர்டு, SE மற்றும் பிளாசா என மூன்று விதமாக கிடைக்கின்ற நிலையில் கூடுதலாக புதிப்பிக்கப்பட்ட நிறங்களாக ஸ்டாண்டர்டில் கருப்பு நிறத்தை மட்டும் பெற்றுள்ள நிலையில், அடுத்த பிளாசா மாடல் பியர்ல் சாண்ட் காக்கி மற்றும் பேர்ல் ஸ்ட்ராம் கிரே நிறத்தில் வருகிறது. மறுபுறம், SE டிரிம் மெட்டாலிக் மேட் டார்க் க்ரீனுடன் மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க் பிளாக் அல்லது கருமை நிற பாண்டம் ப்ளூ ஆகிய டூயல் டோன் விருப்பங்களைப் பெற்றுள்ளது.
கூடுதல் வசதிகளாக ஃபோன் சார்ஜிங் போர்ட்கள் மற்றும் ஜிபிஎஸ்-இணக்கமான இரட்டை கேமரா அமைப்பு (முன் மற்றும் பின்புறம்) உள்ளது. இந்திய சந்தையில் கவாஸாகி Z650RS மற்றும் எலிமினேட்டர் 450 விற்பனையில் உள்ளது. கூடுதலாக புதிய நின்ஜா 500 டீசரை வெளியிட்டுள்ளது.