குடும்பங்களின் பயன்பாட்டிற்கு ஏற்ற வழக்கமான வடிவமைப்பினை பெற்ற ஏத்தர் ரிஸ்தா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய விபரத்தை மீண்டும் டீசர் மூலம் வெளியிட்டுள்ளது. அடுத்த சில வாரங்களுக்கு பிறகு அறிமுகம் செய்யப்பட உள்ள ரிஸ்தாவில் மிகப்பெரிய சீட் மட்டுமல்லாமல் அகலமான ஃபுளோர் போர்டு உள்ளதை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
புதிய டீசர் மூலம் ரிஸ்தா பற்றி கிடைத்துள்ள சில விவரங்கள்;
- ஹெட்லைட்கள் மற்றும் இன்டிகேட்டர் ஆனது அப்ரானில் கீழ் பகுதியில் உள்ளது.
- விசாலமான ஃப்ளோர்போர்டு
- இரண்டு பெரியவர்கள் அமர்ந்து செல்லும் வகையிலான பெரிய இருக்கை பில்லியன் ரைடருக்கான கிராப்ரெயில் ஆகியவற்றுடன் வருகிறது.
- இந்த மாடலுக்கு வழக்கமான பிசிக்கல் கீ உள்ளது.
- 450எஸ் ஸ்கூட்டரில் உள்ளதை போன்ற டீப்வியூ டிஸ்பிளே பெற்ற கிளஸ்ட்டரை பெற வாய்ப்புள்ளது.
- ஸ்மார்ட்போன் இணைப்பின் மூலம் பல்வேறு ஏதெர் கனெக்ட் வசதிகளை பெற உள்ளது.
ஏத்தரின் 450s மற்றும் 450X மாடலில் இடம்பெற்றிருக்கின்ற அடிப்படையான மெக்கானிக்கல் மற்றும் பேட்டரி விபரங்களை பகிர்ந்து கொள்ளும் என்பதனால், டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ வரை வெளிப்படுத்தக்கூடியதாக விளங்க உள்ள ரிஸ்தாவில் 2.9Kwh மற்றும் 3.7Kwh என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷனை பெற உள்ளது.
3.7Kwh பேட்டரி பெற்ற வேரியண்ட் அதிகபட்சமாக சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் வரம்பு 140-150 கிமீ வழங்கலாம். அடுத்து குறைந்த விலை 2.9Kwh பேட்டரி கொண்ட மாடலின் பயணிக்கும் வரம்பு 111-125 கிமீ வழங்கலாம்.
அறிமுகம் ஏத்தர் ACDC 24 (Ather Community Day Celebration 2024) கூட்டத்தில் வெளியிடப்பட உள்ள ரிஸ்தா இ-ஸ்கூட்டரின் விலை ரூ.1.20 லட்சத்தில் துவங்கும் என்பதனால் டிவிஎஸ் ஐக்யூப், ஓலா எஸ்1 ஏர் ஆகியவற்றை எதிர்கொள்ளலாம்.