வரும் மார்ச் 5 ஆம் தேதி 700 கிமீ ரேஞ்ச் பெற்றதாக பிஓய்டி சீல் (BYD Seal) செடான் காரை தனது மூன்றாவது மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே, இந்நிறுவனம் E6 , Atto 3 என இரு மாடல்களை விற்பனை செய்து வருகின்றது.
சர்வதேச அளவில் பிஓய்டி எலக்ட்ரிக் காரில் 61.4kWh மற்றும் 82.5kWh என இரு விதமான பேட்டரி ஆப்ஷன் இடம்பெற்றிருக்கின்ற நிலையில், இந்திய சந்தைக்கு டாப் வேரியண்ட் 82.5kWh பேட்டரி பெற்று இரண்டு எலக்ட்ரிக் மோட்டார் பெற்ற மாடல் வரக்கூடும். சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலை பெற்றுள்ள சீல் செடானில் பல்வேறு நவீனத்துவமான வசதிகளை கொண்டிருக்கும்.
பிஓய்டி சீல் 82.5kWh வேரியண்ட் முக்கிய விபரம்;
- இரு அச்சிலும் தலா ஒரு மோட்டாரை பெற்று 530hp மற்றும் 670Nm டார்க் உற்பத்தி செய்கின்றது.
- 0-100kmph வேகத்தை எட்ட 3.8 வினாடிகளை ஆல் வீல் டிரைவ் மாடல் கொண்டுள்ளது.
- முழுமையான சிங்கிள் சார்ஜில் பயணிக்கும் வரம்பு 700 கிமீ (CLTC)
- Seal காரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 180 கிமீ ஆகும்.
- 150kW விரைவு சார்ஜரை ஆதரிக்கின்ற ‘Blade Battery’ டெக்னாலஜி பெறுகின்றது.
குறைந்த 61.4kWh பேட்டரி பெற்ற மாடல் அதிகபட்சமாக பயணிக்கும் வரம்பு 500 கிமீ ஆக உள்ளது. முதற்கட்டமாக டாப் வேரியண்ட் விற்பனைக்கு வரவுள்ள நிலையில் இந்த மாடலில் ADAS பாதுகாப்பு தொகுப்பு, 360 டிகிரி கேமரா, பனேரமிக் சன்ரூஃப், விரும்பும் பக்கம் திருப்பிக் கொள்ளும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டரை கொண்டுள்ளது.
நம் நாட்டில் BYD Seal விற்பனைக்கு வரும் பொழுது ரூ.50 லட்சத்துக்கும் கூடுதலான விலையில் அறிமுகம் செய்யப்படலாம்.
இந்தியாவில் தொடர்ந்து எலக்ட்ரிக் வாகனங்ளின் விற்பனை சிறப்பாக வளர்ச்சி பாதையில் பயனித்து வரும் நிலையில் பிஓய்டி தனது ஆலையை விரிவுப்படுத்த திட்டமிட்டிருந்தாலும் இந்திய-சீன எல்லை பிரச்சனையின் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.