2024 ஆம் ஆண்டின் ஜனவரி துவக்க மாதத்தில் அதிகப்படியான இந்தியர்கள் தேர்ந்தெடுத்த டாப் 10 இருசக்கர வாகனங்களில் ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) முதலிடத்தில் 2,55,162 பைக்குகளை விற்பனை செய்துள்ள நிலையில் கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் விற்பனை 2.56 % வீழ்ச்சி அடைந்துள்ளது.
அடுத்த இடத்தில் உள்ள ஹோண்டா ஆக்டிவா 2023 ஜனவரி மாதத்தை விட 33.66 % வளர்ச்சி அடைந்து 1,73,760 வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளது.ஹோண்டா ஷைன் விற்பனை எண்ணிக்கை 1,45,252 ஆகவும் இதுதவிர, பஜாஜ் பல்சர் நான்காவது இடத்தில் 1,28,883 யூனிட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. பல்சரின் வளர்ச்சி 52.92 % வளர்ச்சி அடைந்துள்ளது.
முதல் 10 இடங்களில் டிவிஎஸ் நிறுவனத்தின் மூன்று மாடல்களும், ஹோண்டா, பஜாஜ் ஆட்டோ மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் தலா 2 இடங்களை பகிர்ந்து கொள்ளுகின்றன. சுசூகி நிறுவன ஆக்செஸ் பட்டியலில் 7வது இடத்தில் 55,386 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது.
அட்டவனையில் ஜனவரி 2024 டாப் 10 விற்பனை நிலவரம் பின்வருமாறு;-
டாப் 10 இருசக்கர வாகனம் | ஜனவரி 2024 | ஜனவரி 2023 |
1. ஹீரோ ஸ்பிளெண்டர் | 2,55,122 | 2,61,833 |
2. ஹோண்டா ஆக்டிவா | 1,73,760 | 1,30,001 |
3. ஹோண்டா ஷைன் | 1,45,252 | 99,878 |
4. பஜாஜ் பல்சர் | 1,28,883 | 84,279 |
5. ஹீரோ HF டீலக்ஸ் | 78,764 | 47,840 |
6. டிவிஎஸ் ஜூபிடர் | 74,225 | 54,484 |
7. சுசூகி ஆக்செஸ் | 55,386 | 45,497 |
8. டிவிஎஸ் ரைடர் | 43,331 | 27,233 |
9. டிவிஎஸ் XL | 42,036 | 36,723 |
10. பஜாஜ் பிளாட்டினா | 33,103 | 41,873 |
முதல் 10 இடங்களில் மூன்று ஸ்கூட்டர்கள், 6 பைக்குகள் மற்றும் ஒரு மொபெட் டிவிஎஸ் XL100 மாடல் 42,036 ஆக பதிவு செய்து முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 14.47 % வளர்ச்சி பெற்றுள்ளது. 125சிசி வரிசையில் உள்ள டிவிஎஸ் ரைடர் பைக் 43,331 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. இறுதி இடத்தில் பஜாஜ் பிளாட்டினா உள்ளது.