பஜாஜ் ஆட்டோவின் 2024 ஆம் ஆண்டிற்கான பல்சர் NS200 பைக்கில் கூடுதலாக புதிய எல்இடி ஹெட்லைட், டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் உட்பட பல்வேறு மாற்றங்களை கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு மூலம் பல்சர் என்எஸ்200 பைக்கின் டிசைன் அம்சங்கள் வெளியான நிலையில் என்ஜின் உட்பட அடிப்படையான மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றங்களும் இல்லை.
பல்சரின் NS200 பைக்கில் தொடர்ந்து 9750 rpm-ல் 24.13 bhp பவர் மற்றும் டார்க் 18.74 Nm உற்பத்தி செய்கின்ற 199.5cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ள மாடல் ஆறு வேக கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ள புதிய எல்இடி ஹெட்லைட் மேம்பட்டதாகவும் அதிகப்படியான வெளிச்சத்தை இரவு நேரங்களில் வழங்கும் வகையில் அமைந்துள்ளது.
புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் மூலம் ஸ்மார்ட்போன் வாயிலாக ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி மூலம் ஏற்படுத்தினால் ரைட் கனெக்ட் ஆப் (Ride Connect App) மூலம் இணைத்தால் அழைப்புகள், மொபைல் டவர் சிக்னல், போன் பேட்டரி இருப்பு, அழைப்புகளை ஏற்க அல்லது நிராகரிக்கும் வசதி, மெசேஜ் அலர்ட் ஆகியவற்றுடன் டர்ன் பை டர்ன் நேவிகேஷனை இந்த கிளஸ்ட்டரில் அறிந்து கொள்ளலாம்.
இதுதவிர கியர் பொசிஷன் இன்டிகேட்டர், சராசரி மைலேஜ், ரைடிங்கை பொறுத்து தற்பொழுது மைலேஜ் எவ்வளவு கிடைக்கலாம், எவ்வளவு தொலைவு செல்ல பெட்ரோல் இருப்பு ஆகிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
NS200 பைக் மாடலில் முன்பக்கத்தில் 100/80 – 17 டயருடன் பின்புறத்தில் 130/70 – 17 டயரை பெற்று ட்யூப்லெஸ் ஆக அமைந்துள்ளது. இந்த மாடலில் 300 மிமீ டிஸ்க் மற்றும் 230 மிமீ டிஸ்க் பிரேக்குடன் இரு மாடல்களிலும் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது. புதிய 2024 பஜாஜ் பல்சர் என்எஸ்200 பைக்கின் விலை தற்பொழுது அறிவிக்கப்படவில்லை. விலை முந்தைய மாடலை விட ரூ.5,000 உயர்த்தப்படும் என்பதனால் ரூ.1.55 லட்சத்தை எட்டலாம்.
சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பல்சர் என்150 மற்றும் பல்சர் என்160 பைக்குகளில் டிஜிட்டல் கிளஸ்ட்டர் மட்டுமே சேர்க்ககப்பட்ட டாப் வேரியண்ட் வெளியானது.