ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன புதிய மேவ்ரிக் 440 (Hero Mavrick 440) பைக்கின் விலை ரூபாய் 1.99 லட்சம் முதல் ரூபாய் 2.24 லட்சம் வரை அமைந்துள்ளது. மேவரிக் 440 மாடலின் நிறங்கள், மைலேஜ், எஞ்சின் விபரம் உட்பட அனைத்து முக்கிய அம்சங்களையும் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.
ஹீரோ மேவ்ரிக் 440
350சிசி முதல் 500சிசி வரையில் இடைப்பட்ட பைக்குகளுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தும் வகையில் வந்துள்ள மேவ்ரிக் 440 பைக் ஆனது 440cc என்ஜினை பெறுகின்றது. இந்த எஞ்சின் ஏற்கனவே விற்பனைக்கு வந்த ஹார்லி டேவிட்சன் X440 பைக்கில் இடம் பெற்றதாகும்.
ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோ கார் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள இரண்டாவது மாடலானது மிக நேர்த்தியான நவீனத்துவமான ரோட்ஸ்டெர் அமைப்பினை பெறுகின்ற பைக்கில் வட்ட வடிவ எல்ஈடி ஹெட் லைட் ஆனது கொடுக்கப்பட்டு நெகட்டிவ் எல்சிடி டிஜிட்டல் கிளஸ்டர் மற்றும் நேர்த்தியான 5 விதமான வண்ணங்கள் 3 விதமான வேரியண்டுகள் என கவர்ச்சிகரமாக அமைந்திருக்கின்றது.
மேவ்ரிக் 440 எஞ்சின் விபரம்: 440cc ஏர் ஆயில் கூல்டு ஒற்றை சிலிண்டர் Torq-X என்ஜின் அதிகபட்சமாக 6000 RPM-ல் 27 bhp பவர் மற்றும் 4000rpm-ல் 36Nm டார்க்கை உற்பத்தி செய்கின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் சிலிப்பர் கிளட்ச் உள்ளது.
சஸ்பென்ஷன் மற்றும் சேஸ்: மேவரிக் 440 பைக்கில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பர் உள்ளது. 110/70 – 17 மற்றும் பின்புறத்தில் 150/60 – 17 டயர் கொண்டுள்ளது. டிஸ்க் பிரேக் 320mm மற்றும் பின்புறத்தில் 240mm டிஸ்க் பிரேக் கொண்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெற்றுள்ளது.
மூன்று வேரியண்ட்:
- துவக்கநிலை பேஸ் வேரியண்ட் ஒற்றை ஆர்டிக் வெள்ளை நிறத்தை பெற்று ஸ்போக்டூ வீல் ட்யூப் டயர் கொண்டு சாதாரண கிளஸ்ட்டரை மட்டும் பெறுகின்றது.
- நடுத்தர மிட் வேரியண்ட் மாடலில் ட்யூப்லெஸ் டயர், அலாய் வீல் பெற்று ஃபியர்லெஸ் சிவப்பு, நீலம் என இரு நிறங்கள் வந்துள்ளது.
- அடுத்து டாப் வேரியண்டில் டைமண்ட் கட் அலாய் வீல், மெசின் ஃபினிஷ்டு என்ஜின் பாகங்கள், ஹீரோ கனெக்ட் மூலம் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ஜியோ-பென்ஸ், மொபைல் விபரம், அழைப்புகளை ஏற்க அல்லது நிராகரிக்க என 35க்கு மேற்பட்ட கனெக்ட்டிவிட்டி வசதிகளுடன் பெற்று பேன்டம் பிளாக் மற்றும் என்கிமா பிளாக் என இரு நிறங்களை கொண்டுள்ளது.
2024 ஹீரோ மேவ்ரிக் 440 நுட்பவிபர அட்டவணை
ஹீரோ மேவ்ரிக் 440 | Base/Mid/Top |
எஞ்சின் மற்றும் டிரான்ஸ்மிஷன் | |
எஞ்சின் வகை | சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், 2V SOHC, FI |
Bore & Stroke | 79.6X88.4 mm |
இடப்பெயர்ச்சி (cc) | 440 cc |
Compression ratio | 9.65:1 |
குளிரூட்டும் முறை | ஏர்-ஆயில் |
அதிகபட்ச சக்தி | 27 bhp @ 6,000 rpm |
அதிகபட்ச டார்க் | 36 Nm @ 4,000 rpm |
டிரான்ஸ்மிஷன் வகை | 6 ஸ்பீடு சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் |
சேஸிஸ் மற்றும் சஸ்பென்ஷன் | |
சேஸிஸ் வகை | ட்ரெல்லிஸ் ஃபிரேம் |
முன் சஸ்பென்ஷன் | டெலிஸ்கோபிக் ஃபோர்க், 43 மிமீ |
பின் சஸ்பென்ஷன் | 7 படிநிலை ட்வீன் ஷாக் அப்சார்பர் |
முன் பிரேக் | டிஸ்க் 320 மிமீ |
பின் பிரேக் | டிஸ்க் 240 மிமீ |
பிரேக்கிங் முறை | டூயல் சேனல் ஏபிஎஸ் |
வீல் & டயர் | |
சக்கர வகை | ஸ்போக்/அலாய் |
முன்புற டயர் | 110/70 – 17 |
பின்புற டயர் | 150/60 – 17 |
பரிமாணங்கள் மற்றும் எடை | |
நீளம் | 2,100 மிமீ |
அகலம் | 868 மிமீ |
உயரம் | 1,112 மிமீ |
வீல்பேஸ் | 1,388 மிமீ |
இருக்கை உயரம் | 803 மிமீ |
கிரவுண்ட் கிளியரண்ஸ் | 175 மிமீ |
எரிபொருள் கொள்ளளவு | 13.5 லிட்டர் |
எடை (Kerb) | 187 கிலோ |
செயல்திறன் மற்றும் மைலேஜ் | |
அதிகபட்ச வேகம் | 150 kmph |
மைலேஜ் | 36 kmpl |
பிற அம்சங்கள் | |
பேட்டரி | 12V 8.0Ah |
ஸ்டார்டர் வகை | எலக்ட்ரிக் செல்ஃப் |
கருவிகள் மற்றும் முக்கிய அம்சங்கள் | எல்சிடி கிளஸ்ட்டர் பெற்று ஹீரோ கனெக்ட் மூலம் டர்ன் பை டர்ன் நேவிகேஷன் உட்பட 35 வசதிகள் உள்ளன |
விலை (எக்ஸ்ஷோரூம்) | Base – ₹ 1,99,000 Mid – ₹ 2,14,000 Top ₹ 2,24,000 |
ஹீரோ மேவ்ரிக் 440 வண்ணங்கள்
பேஸ் மாடலில் ஆர்டிக் வெள்ளை, மிட் மாடலில் ஃபியர்லெஸ் ரெட், ப்ளூ இறுதியாக Maverick 440 டாப் வேரியண்டில் பேன்டம் பிளாக் மற்றும் என்கிமா பிளாக் என ஒட்டுமொத்தமாக 5 நிறங்களை பெறுகின்றது.
ஹீரோ மேவ்ரிக் 440 ஆன் ரோடு விலை
மேவ்ரிக் 440 பைக்கின் முழுமையான ஆன் ரோடு விலை பட்டியல் அட்டவணை பின்வருமாறு-
Hero Mavrick 440 | விலை (எக்ஸ்-ஷோரூம்) | ஆன்-ரோடு விலை |
Mavrick Base | ₹ 1,99,000 | ₹ 2,39,789 |
Mid | ₹ 2,14,000 | ₹ 2,56,878 |
Top | ₹ 2,24,000 | ₹ 2,69,721 |
(Hero Mavrick 440 on-road price Tamil Nadu)
குறிப்பிடப்பட்டுள்ள விலை சென்னை உட்பட அனைத்து தமிழ்நாட்டின் நகரங்களுக்கும் பொருந்தும் கூடுதலாக ஆக்செரீஸ் சேர்க்கப்படும் பொழுது விலை மாறுபடக்கூடும்.
Hero Mavrick Rivals
ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கிற்கு போட்டியாக டிரையம்ப் ஸ்பீடு 440, ஸ்கிராம்பளர் 400 X, கிளாசிக் 350, ஹோண்டா CB 350, ஜாவா 350 உள்ளிட்ட மாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஹீரோ மேவ்ரிக் பற்றிய FAQs:
ஹீரோ மேவ்ரிக் 440 எஞ்சின் திறன் என்ன?
ஹீரோ மேவ்ரிக் 440cc ஏர்-ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர், 4-ஸ்ட்ரோக், SOHC, 2-வால்வு எஞ்சின் கொண்டுள்ளது, இது 27 bhp சக்தி @ 6,000 rpm மற்றும் 36 Nm முறுக்கு @ 4000 rpmல் உற்பத்தி செய்கிறது.
ஹீரோ மேவ்ரிக் 440 மைலேஜ் என்ன?
ஹீரோ மேவ்ரிக் 440 எரிபொருள் சிக்கனம் அல்லது மைலேஜ் லிட்டருக்கு 30-32 கிமீ கிடைக்கலாம்,
ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கின் ஆன்-ரோடு விலை ?
ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ. 2.39 லட்சம் முதல் ரூ. 2.68 லட்சம் வரை கிடைக்கின்றது. (தமிழ்நாட்டிற்கு பொருந்தும்)
Hero Mavrick 440 பைக்கின் போட்டியாளர்கள் யார் ?
டிரையம்ப் ஸ்பீடு 400, ராயல் என்ஃபீல்டு 350சிசி பைக்குகள் மற்றும் ஹோண்டா சிபி 350 ஆர்எஸ் ஆகியவற்றை Hero Mavrick 440 எதிர்கொள்ளுகின்றது.
மேவரிக் 440ல் எத்தனை வேரியண்ட் உள்ளது ?
மேவரிக் 440 பைக்கில் பேஸ், மிட் மற்றும் டாப் என என மூன்று வேரியண்டுகளில் 5 விதமான நிறங்கள் ஸ்போக் வீல் மற்றும் அலாய் வீல் பெற்றுள்ளது.