இந்தியாவில் யமஹா மோட்டார் விற்பனை செய்த 125cc பிரிவில் உள்ள ரே இசட்ஆர் 125 Fi ஹைபிரிட் மற்றும் ஃபேசினோ 125 Fi ஹைபிரிட் ஆகிய மாடல்களில் ஏற்பட்டுள்ள பிரேக் லிவர் குறைபாட்டை நீக்குவதற்கு 3,00,000 யூனிட்டுகளை திரும்ப அழைக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ரீகால் தொடர்பான அறிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்;
- ஜனவரி 1, 2022 முதல் ஜனவரி 4, 2024 வரையில் தயாரிக்கப்பட்ட மாடல்களை திரும்ப அழைக்க உள்ளது.
- “ரீகால் செய்யப்படுகின்ற Ray ZR 125 Fi ஹைப்ரிட் மற்றும் Fascino 125 Fi ஹைப்ரிட் ஸ்கூட்டர் மாடல்களின் (ஜனவரி 2022 முதல் மாடல்கள்)
- தேர்ந்தெடுக்கப்பட்ட யூனிட்களில் பிரேக் லீவர் செயல்பாட்டில் உள்ள கோளாறினை தீர்க்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- மாற்றித் தரப்பட உள்ள புதிய உதிரிபாகத்துக்கு எந்த கட்டணமும் இல்லாமல் வாடிக்கையாளருக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
- உங்கள் வாகனம் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதனை அறிய யமஹா இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் https://www.yamaha-motor-india.com/service-recall-sc.html பக்கத்தை பார்வையிடலாம்.
- இந்த பக்கத்தில் உங்கள் ஸ்கூட்டரின் சேஸ் எண் கொண்டு ரீகால் உள்ளதா ? என்பதனை அறிந்து கொள்ளலாம்.
- திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை 1800-420-1600 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உங்கள் ஸ்கூட்டர் பாதிக்கப்படுள்ளதா எனபதனை கேட்டு அறிந்து கொள்ளலாம்.