ரூ.11.83 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள டிரையம்ப் Scrambler 1200 X மாடலில் குறைவான இருக்கை உயரம் பெற்றுள்ளதால் இலகுவாக உயரம் குறைந்தவர்களும் அனுகும் வகையில் அமைந்துள்ளது.
XE மற்றும் XC மாடல் 820 மிமீ இருக்கை உயரம் பெற்றிருந்த நிலையில் தற்பொழுது வந்துள்ள 1200 X பைக்கின் இருக்கை உயரம் 795 மிமீ மட்டுமே ஆகும்.
என்ஜின் விபரம்: 1200cc பேரலல் ட்வீன் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது 90 bhp மற்றும் 110 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
ரைடிங் மோடு: 5 விதமான ரைடிங் மோடுகளாக (Rain, Road, Sport, Off-road மற்றும் Rider configurable) பெற்றுள்ள ஸ்கிராம்பளர் 1200X பைக்கில் IMU ஆதரவுடன் கூடிய டிராக்ஷன் கட்டுப்பாடு மற்றும் ஏபிஎஸ் உள்ளது.
டிஜிட்டல் கன்சோல்: டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் அறிவிப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை பெறுவதற்கு புளூடூத் கனெக்ட்டிவிட்டியை டிஜிட்டல் கிளஸ்ட்டர் மூலம் பெறலாம்.
மெக்கானிக்கல் அம்சங்கள்: முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பர் பெற்று அட்ஜெஸ்டபிள் முறையில் வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் ட்வீன் டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் ஒற்றை டிஸ்க் பிரேக்குடன், முன்பக்கம் 21 அங்குல வீல், பின்புறத்தில் 17 அங்குல வீல் பெற்று ஸ்போக்டூ வீல் பெற்றிருந்தாலும் ட்யூப்லெஸ் டயர் பெற்றுள்ளது.
டிரையம்ப் ஸ்கிராம்பளர் 1200X பைக்கின் எடை 228 கிலோ மற்றும் 15 பெட்ரோல் டேங்க் பெற்றுள்ளது. இந்த பைக்கின் விலை ரூ.11.83 லட்சம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.