கேடிஎம் நிறுவனத்தின் புதிய 390 அட்வென்ச்சர் பைக்கின் சோதனை ஓட்ட படங்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் எப்பொழுது விற்பனைக்கு வரும் மற்றும் என்ஜின் உட்பட பல்வேறு மாற்றங்களை பற்றி தொகுத்து அறிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் வெளியான ஹிமாலயன் 450 பைக்கிற்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ள புதிய 390 அட்வென்ச்சரின் தோற்ற அமைப்பு ஏற்கனவே சந்தையில் கிடைக்கின்ற 390 டியூக் பைக்கில் உள்ள என்ஜினை பகிர்ந்து கொள்ளுவது உறுதியாகியுள்ளது.
கேடிஎம் 390 டியூக்கில் உள்ள 44.25 bhp பவர் மற்றும் 39Nm டார்க் வழங்குகின்ற நிலையில் 399cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் கூடுதலாக, சிலிப் அசிஸ்ட் கிளட்ச் மற்றும் க்விக் ஷிஃப்டர் பெறுகின்றது.
சில மேம்பாடுகளை பெற்ற ஸ்டீல் டெர்லிஸ் சேஸ் பெற்றதாகவும் சப் ஃபிரேம் அட்வென்ச்சருக்கு ஏற்ற வகையில் மாறுபட்டதாக அமைந்துள்ளது. முன்பக்கத்தில் பீரிலோட் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வகையிலான அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் சஸ்பென்ஷனை பெற உள்ளது. விற்பனையில் உள்ள அட்வென்ச்சரை விட முற்றிலும் மேம்பட்ட ஆஃப் ரோடு அனுபவத்தை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட உள்ளது.
வரவுள்ள 2025 கேடிஎம் 390 அட்வென்ச்சர் பைக்கில் 5 அங்குல டிஜிட்டல் கன்சோல், லான்ச் கன்ட்ரோல் மற்றும் ரைடிங் முறைகள் பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் வசதிகளுடன் 21 அங்குல அலாய் வீல் மற்றும் 19 அங்குல அலாய் வீல் உட்பட ஸ்போக்டூ வீல் வேரியண்ட் பெற்ற மாடலும் வரக்கூடும். 2024 நவம்பர் மாதம் நடைபெற உள்ள EICMA 2024 அரங்கில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது.