இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற மாருதி சுசூகி ஸ்விஃப்ட் முதன்முறையாக ஜப்பான் சந்தையில் 1983 ஆம் ஆண்டு 25வது டோக்கியோ மோட்டோ ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.
ஸ்விஃப்ட் காருக்கு முதன்முறையாக சுசூகி வைத்த பெயர் Cultus/SA310 என அறிவிக்கப்பட்ட நிலையில் 1985 ஆம் ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து சந்தையில் வெளியான பொழுது ஸ்விஃப்ட் என்ற பெயரை பெற்று தற்பொழுது நான்காவது தலைமுறை ஸ்விஃப்ட் விற்பனைக்கு வெளியாகியுள்ளது.
Suzuki Swift
1983 ஆம் ஆண்டு தனது சொந்த நாட்டில் வெளியான ஸ்விஃப்ட் 1989 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு இங்கிலாந்தில் விற்பனை செய்ய ஹங்கேரியில் தயாரிக்கப்பட்ட மாடல் மிக சிறப்பான கேபின் வசதி மற்றும் லக்கேஜ் வசதி பெற்று 13 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தியில் இருந்தது. இந்த காலத்தில் மூன்று மற்றும் ஐந்து டோர் அமைப்பினை பெற்று 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் அல்லது 1.3 லிட்டர் நான்கு சிலிண்டர் என்ஜின் பெற்றிருந்தது.
இந்தியாவில் முதன்முறையாக 2004 ஆம் ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் கான்செப்ட் எஸ் என்ற பெயரில் முதன்முறையாக காட்சிக்கு வைக்கப்பட்டது.
2005 முதல் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் ரக மாடலை சுசூகி அறிமுகம் செய்ய துவங்கியது. மாருதி சுசூகி ஸ்விஃப்ட் மே 25, 2005 அன்று இந்திய சந்தையில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வெளியான நிலையில், 2007 ஆம் ஆண்டு ஃபியட் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் தொடர்ந்து ஆஸ்தான என்ஜினாக விளங்கியது.
2013 ஆம் ஆண்டு 10 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டியதன் மூலம் இந்தியாவில் மிகவும் நம்பகமான மாடலாக விளங்குகின்றது. அதைத் தொடர்ந்து இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் 25 லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது. சர்வதேச அளவில் 2016 ஆம் ஆண்டு 50 லட்சம் இலக்கையும், தற்பொழுது 90 லட்சத்துக்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.