இந்தியாவில் முதன்முறையாக ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்ற சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் டாடா டிகோர் மற்றும் டியாகோ விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற சிஎன்ஜி வேரியண்ட் சந்தையில் உள்ளது.
செடான் பிரிவில் விற்பனை செய்யப்படுகின்ற டிகோர் மாடலில் புதிதாக மிட்டியோர் பிரான்ஸ் நிறம் மற்றும் டியாகோ காரில் நீல நிறமும் புதிதாக இணைந்துள்ளது. கூடுதலாக டியாகோ NRG வேரியண்ட் பீஜ் நிறத்தை பெற்றுள்ளது.
Tata AMT iCNG
இரண்டு கார்களில் பொதுவாக வழங்கப்பட்டுள்ள 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பெட்ரோலுடன் 86hp மற்றும் 113Nm டார்க், CNG பயன்முறையில் கிடைக்கும் பொழுது, 77hp மற்றும் 97Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடல் சிறப்பான நெரிசல் மிகுந்த நகரங்களுக்கு ஏற்றதாக விளங்குகின்ற வகையில் வந்துள்ளது.
டிகோர் ஏஎம்டி மற்றும் டியாகோ ஏஎம்டி என இரண்டும் சிஎன்ஜி கிலோவிற்கு 28.06km/kg மைலேஜ் வழங்குகின்றது.
TIAGO iCNG AMT PRICES (EX-SHOWROOM, Tamil Nadu) | |
---|---|
Variant | Pricelist |
XTA | ₹ 7,89,900 |
XZA+ | ₹ 8,79,900 |
XZA NRG | ₹ 8,79,900 |
XZA+ DT | ₹ 8,89,900 |
டிகோர் XZA+ டாப் வேரியண்டில் 17.78 செமீ தொடுதிரை ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 4 ஸ்பீக்கர் மற்றும் 4 ட்வீட்டர், எல்இடி ரன்னிங் விளக்குடன் ஆட்டோ ஹெட்லேம்ப், மழையை உணர்ந்து செயல்படும் வைப்பர்கள், ஆட்டோ ஏசி கட்டுப்பாடு, ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா மற்றும் கீலெஸ் என்ட்ரியுடன் புஷ் பட்டன் ஸ்டார்ட் உள்ளிட்ட அம்சங்களுடன் லெதேரேட் இருக்கைகள் உள்ளது.
மேலே உள்ள வசதிகளுடன் கூடுதலாக டியாகோ டாப் வேரியண்டில் டூயல் டோன் உள்ளது.
TIGOR iCNG AMT PRICES (EX-SHOWROOM, Tamil Nadu) | |
---|---|
Variant | Price |
XZA | ₹ 8,84,900 |
XZA+ | ₹ 9,54,900 |