2024 ஆம் ஆண்டை முன்னிட்டு கேடிஎம் ஆர்சி வரிசை பைக்குகளில் உள்ள RC 390, RC 200 மற்றும் RC 125 என மூன்று மாடல்களிலும் புதுப்பிக்கப்பட்ட நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. மற்றபடி, எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லை.
ஃபேரிங் ஸ்டைல் பெற்ற புதிய ஆர்சி பைக்குகள் அடுத்த சில வாரங்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற இந்த மாடல்களில் நேர்த்தியாக சேர்க்கப்பட்டுள்ள பாடி கிராபிக்ஸ் கவர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.
2024 KTM RC 390
புதிய RC 390 பைக்கில் ஆரஞ்ச் உடன் நீலம், ஆரஞ்ச் உடன் கருப்பு என இரு நிறங்களை கொண்டு மேம்படுத்தப்பட்ட பாடி கிராபிக்ஸ் பெற்று ஆர்சி 390 பேட்ஜ் ஸ்டிக்கரிங் கொண்டுள்ளது.
2024 கே.டி.எம் RC 390 மாடலில் தொடர்ந்து 373.27cc லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 42.9 bhp, 37Nm வெளிப்படுத்துகின்றது. இந்த பைக் மாடலில் ஆறு வேக கியர்பாக்ஸ் உடன் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், கூடுதலாக க்விக் ஷிஃப்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.
முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பருடன் இருபக்கத்திலும் 17 அங்குல அலாய் வீல் பெற்றதாக அமைந்து இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
2024 KTM RC 200
புதியதாக வெளியிடப்பட்டுள்ள KTM RC 200 பைக் மாடலில் 25bhp மற்றும் 19Nm பவர் வெளிப்படுத்தும் 200cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் லிக்யூடு கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
கருப்பு நிறத்துடன் வெள்ளை, நீலத்துடன் ஆரஞ்ச் பெற்றுள்ள ஆர்சி 200 மாடலில் புதிய பாடி கிராபிக்ஸ் பெற்று எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் வெளியிடப்பட்டுள்ளது.
2024 KTM RC 125
துவக்க நிலை சந்தையில் கிடைக்கின்ற 2024 ஆம் ஆண்டிற்கான KTM RC 125 பைக்கில் RC16 ரேசிங் குழுவின் பாடி கிராபிக்ஸ் கொண்டதாக கருப்பு நிறத்துடன் ஆரஞ்ச் மற்றும் நீல நிறத்துடன் ஆரஞ்ச் என இரு நிறங்களை கொண்டுள்ளது.
14.34bhp மற்றும் 12Nm பவர் வெளிப்படுத்தும் 124.7cc ஒற்றை சிலிண்டர் என்ஜின் லிக்யூடு கூல்டு என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது. இந்த மாடலிலும் எவ்விதமான மெக்கானிக்கல் மாற்றங்களும் இல்லாமல் அப்சைடு டவுன் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் அப்சார்பருடன் அலாய் வீல் பெற்றதாக அமைந்து இரு பக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக்குடன் டூயல் சேனல் ஏபிஎஸ் உள்ளது.
அடுத்த சில வாரங்களில் இந்திய சந்தையில் விற்பனைக்கு 2024 கேடிஎம் ஆர்சி பைக்குகள் விலை அறிவிக்கப்படலாம்.