ஐஷர் மற்றும் போலாரீஸ் இணைந்து தயாரித்த மல்டிக்ஸ் எனப்படும் 3 பயன்களை கொண்ட யுட்டிலிட்டி பயணிகள் வாகனத்திற்கு ஐஷர் மல்டிக்ஸ் 24X7 சாலையோர வசதியை ஐஷர் போலாரிஸ் இணைந்து வழங்கியுள்ளது. வாகனத்தில் ஏற்படும் பழுதுகளுக்கு முதல் ஒரு வருடத்திற்கு சாலையோர உதவி சேவையை வழங்கியுள்ளது.
மல்டிக்ஸ் வாகனம் 3 விதமான பயன்களை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகும். அதாவது குடும்பம் , தொழில் மற்றும் ஆற்றல் என மூன்று தேவைகளை மையப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள வாகனத்தில் தனிநபர் பயன்பாட்டுக்கு , சுமைகளை ஏற்றி செல்ல வசதி மற்றும் 3 கிலோவாட் ஆற்றலை வெளிப்படுத்தும் மோட்டாரில் மின்சார தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலும்.
பெர்சனல் யுட்டிலிட்டி வாகனம் (Personal Utility Vehicle -PUV) என அழைக்கப்படும் இந்த வாகனத்தில் கிராம்டன் கிரிவ்ஸ் நிறுவனத்தின் 511சிசி டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 28.45கிமீ ஆகும்.
1918 லிட்டர் கொள்ளளவுடன் 5 நபர்கள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மல்டிக்ஸ வாகனத்தில் 3கிலோவாட் அளவுக்கு ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தண்ணிர் இறைக்க , இல்லங்களில் உள்ள விளக்குகளுக்கு மின்சாரத்தை பெற முடியும்.
புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 24X7 சேவையில் திடீரென ஏற்படும் சாலையோரத்திலான பழுதுகளை எவ்விதமான கட்டணமும் இல்லாமல் முதல் ஒரு வருடத்திற்கு நீக்கி தரப்பட உள்ளது. இந்த வசதியில் ஸ்பேர் வீல் மாற்றுவது , எரிபொருள் கொடுக்க , சாவியை தவறவிட்டால் உதவிசெய்ய மேலும் சிறிய அளவிலான எலக்ட்ரிக்கல் மற்றும் மெக்கானிக்கல் வேலைகளை அந்த இடத்திலே சரிசெய்ய இயலும். மேலும் வாகனத்தின் பழுதினை நீக்க முடியவில்லை எனில் அருகில் உள்ள சர்வீஸ் மையங்களுக்கு வாகனத்தினை எடுத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
ஐஷர் போலாரீஸ் மல்டிக்ஸ் வாகன இலவச தொலை தொடர்பு எண் ; 18002083775
3500 இடங்களில் நாடுமுழுவதும் வழங்கப்பட உள்ள இந்த சேவையை இலவசமாக புதிய மற்றும் பழைய வாகன உரிமையாளர்கள் பயன்படுத்தி கொள்ள இயலும். மல்டிக்ஸ் தொடக்க விலை ரூ.2.32 லட்சம் முதல் 2.72 லட்சம் வரை ஆகும். இந்திய சந்தையில் ஐஷர்-போலாரிஸ் கூட்டணில் உருவான மலடிக்ஸ் அறிமுகம் செய்து 1 வருடத்தினை கடந்துள்ளது.