விற்பனையில் உள்ள ஓலா S1X எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் கூடுதலாக 4Kwh பேட்டரி பேக் பெற்றதாக விற்பனைக்கு ரூ.1.10 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்த ஸ்கூட்டரில் 2kwh மற்றும் 3kwh என இரண்டு விதமாக கிடைக்கின்றது.
ஏற்கனவே சந்தையில் உள்ள S1 pro எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள அதே 4Kwh பேட்டரி பேக் ஆனது கூடுதலாக இப்பொழுது S1X மாடலில் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 190 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்துகின்றது. 6kw மோட்டார் பயன்படுத்தப்பட்டு ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட்ஸ் என மூன்று விதமான ரைடிங் மோடுகள் பெற்றுள்ள எஸ்1எக்ஸ் ஸ்கூட்டரில் 4.3 அங்குல கிளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.
அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தை கொண்டுள்ள மாடல் முழுமையான சிங்கிள் சார்ஜ் ஏறுவதற்கு 6 மணி நேரம் 30 நிமிடங்கள் தேவைப்படும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புதிய S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 8 ஆண்டுகள் அல்லது 80,000 கிமீ வரை நீட்டிக்கப்பட்ட பேட்டரி வாரண்டிக்கு எவ்விதமான கூடுதல் கட்டணமும் இல்லாமல் வழங்குகின்றது.
அறிமுகத்தின் பொழுது பேசிய ஓலா சிஇஓ பவிஷ் அகர்வால் கூறுகையில், ஓலா எலக்ட்ரிக் ஏப்ரல் மாதத்திற்குள் 600 சர்வீஸ் மையங்களை துவக்கவும், அடுத்த காலாண்டில் ஃபாஸ்ட் சார்ஜிங் நெட்வொர்க் எண்ணிக்கையை 10,000 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
Ola S1 Electric scooter Price list
தற்பொழுது ஓலா S1 ஸ்கூட்டர் வரிசையில் 6 மாடல்கள் விற்பனைக்கு கிடைக்கின்றது. அவற்றின் விலை பட்டியல் பின் வருமாறு ;-
- Ola S1 X 2Kwh – ₹ 79,999
- Ola S1 X 3Kwh – ₹ 89,999
- Ola S1 X 4Kwh – ₹ 1,09,999
- Ola S1 X+ 3Kwh – ₹ 99,999
- Ola S1 Air 3Kwh – ₹ 1,19,999
- Ola S1 Pro 4Kwh – ₹ 1,47,499
(Ex-showroom)
ஓலா எஸ்1 வரிசை ஸ்கூட்டர்களுக்கு சவால் விடுக்கும் வகையில் ஏதெர் 450, விடா வி1 புரோ, பஜாஜ் சேட்டக், டிவிஎஸ் ஐக்யூப் உள்ளிட்ட பல்வேறு மாடல்களை எதிர்கொள்ளுகின்றது.
மேலும் படிக்க –