புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் டிவிஎஸ் மோட்டார்ஸ் மிக சிறப்பான கவனத்தை செலுத்தி வருகின்றது. டிவிஎஸ் பைக்குகளில் செமி ஆட்டோமேட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷன் பயன்படுத்துவதற்கு காப்புரிமை பெற்றுள்ளது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் ஜைவ் பைக்கில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்ட கிளட்ச் இல்லாத கியர் ஷிஃப்ட மாடல் பெரிதாக வரவேற்பினை பெறாமல் போனது. தற்பொழுது காப்புரிமை பெறப்பட்டுள்ள ஏஎம்டி நுட்பம் ஆனது மிக இலகுவாக கியர் மாற்றும் வகையில் அமைந்திருக்கும்.
புதிய டிவிஎஸ் ஏஎம்டி (செமி ஆட்டோமேட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷன் ) நுட்பம் கைப்பிடிகளில் கொடுக்கப்பட்டுள்ள பட்டன்களின் வாயிலாக கியர்களை மாற்றிக்கொள்ள முடியும். கியர்களை அதிகரிக்க ‘ + ‘ பட்டன் மற்றும் குறைக்க ‘ – ‘ பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும். கியரை அதிகரிக்கவோ அல்லது குறைக்க பட்டனை பயன்படுத்தும் பொழுது எலக்ட்ரிக் மோட்டார் உதவியுடன் ஆக்ச்வேட்டர் செயல்பட்டு கியரை மாற்றும்.
இது சாதரன மெனுவல் மாடலை விட 2.5 சதவீதம் கூடுதலான எரிபொருள் சிக்கனத்தினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்துகளை பெரிய அளவில் தடுக்க உதவியாக இருக்கும்.
கடந்த பிப்ரவரி 2009யில் காப்புரிமைக்கு சமர்பிக்கப்பட்டுள்ள செமி ஏஎம்டி கடந்த மே மாத முடிவில்தான் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளதால் அடுத்த வரவுள்ள பைக் , ஸ்கூட்டர்கள் மற்றும் மூன்று சக்கர ஆட்டோகளில் பயன்படுத்த வாய்ப்புள்ளது.