2016 ஐரோப்பிய கால்பந்து போட்டிகள் தொடங்கியதை கொண்டாடும் வகையில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்களில் சிறப்பு ஸ்போர்ட்ஸ் எடிசன் மாடல்கள் யூரோ தொடர் இறுதி போட்டி வருகின்ற ஜூலை 10 , 2016 நடக்கும் வரை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஏ கிளாஸ் . சிஎல்ஏ , மற்றும் ஜிஎல்ஏ ஆகிய மூன்று மாடல்களில் வெளியிட்டுள்ள சிறப்பு எடிசன் மாடல்களின் தோற்றத்தில் ஏஎம்ஜி ஸ்டைல் முன் மற்றும் பின் பம்பர்களுடன் முன் பம்பர் மற்றும் பக்கவாட்டு ஸ்கிட் பேனல்கள் , ஸ்போர்ட் எடிசன் பேட்ஜ் மற்றும் பின்புறம் பார்க்கும் கண்ணாடியில் கார்பன் ஃபைபர் கவர் போன்றவை கொண்டுள்ளது. உட்புறத்தில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்போர்ட்டிவ் பெடல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மற்றபடி மூன்று கார்களிலும் எவ்விதமான மாற்றங்களும் இல்லாமலே தொடரும்.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஜெர்மன் நாட்டின் தேசிய கால்பந்து அணிக்கு முக்கிய ஸ்பான்சராக விளங்குகின்றது. எனவே அதனை கொண்டாடும் வகையிலே ஐரோப்பிய கால்பந்து போட்டிகளை அடிப்படையாக கொண்ட சிறப்பு ஸ்பெஷல் எடிசனை வெளியிட்டுள்ளது. இதுதவிர மெர்சிடிஸ் விற்பனையாளர்கள் வழியாக கால்பந்து , கீ செயின் , தொப்பி , பேக் மற்றும் பேண்டுகள் ஜெர்மன் கால்பந்து அணியின் பிராண்டில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் ஸ்போர்ட் எடிசன் விலை பட்டியல்
Mercedes A-class 180: Rs 25.95 லட்சம்
Mercedes A-class 200 d: Rs 26.95 லட்சம்
Mercedes CLA 200: Rs 33.24 லட்சம்
Mercedes CLA 200 d: Rs 34.25 லட்சம்
Mercedes GLA 200: Rs 34.23 லட்சம்
Mercedes GLA 200 d: Rs 35.26 லட்சம்
(அனைத்தும் மும்பை எக்ஸ்ஷோரூம் விலை)