வரவிருக்கும் 2017 கேடிஎம் டியூக் 390 பைக்கின் முழு உற்பத்திநிலை படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. பஜாஜ் சக்கன் ஆலையில் எடுக்கப்பட்ட புகைப்படம் என சில தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் இளம் வாடிக்கையாளர்களின் மத்தியில் மிக குறுகிய காலத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற பிரிமியம் ரக ஸ்போர்ட்டிவ் மோட்டார்சைக்கிள்களை கொண்டுள்ள கேடிஎம் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்தின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகின்றது.
விற்பனையில் உள்ள டியூக் 390 பைக்கினை விட முற்றிலும் மாறுபட்ட டிசைன் தாத்பரியங்களுடன் காட்சியளிக்கும் டியூக் 390 பைக்கின் முகப்பில் பெற்றுள்ள இரட்டை பிரிவினை கொண்ட முகப்பு விளக்கு , கூடுதல் ஃபேரிங் , ஃபென்டர் மற்றும் பெட்ரோல் டேங்க போன்றவற்றுடன் தொழில்நுட்ப ரீதியாகவும் பல மாற்றங்களை பெற்று விளங்கும்.
விற்பனையில் உள்ள மாடலில் 373.2சிசி ஒரு சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 45 bhp மற்றும் டார்க் 35Nm ஆகும். வரவுள்ள புதிய மாடலில் யூரோ 4 மாசு உமிழ்வு என்ஜின் மற்றும் கூடுதல் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையிலும் மேம்படுத்தப்பட்டிருக்கும். கடந்த சில மாதங்களாகவே ஸ்பெயின் நாட்டில் சோதனையில் இருந்து வரும் டியூக் 390 படமும் வெளியாகியிருந்தது.
கூடுதல் ஸ்டைல் மற்றும் கூடுதல் ஆற்றலை பெற்ற மாடலாக 2017 கேடிஎம் டியூக் 390 பைக் விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படும் டியூக் 390 அக்டோபர் மத்தியில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வரும் . அதனை தொடர்ந்து இந்தியாவிலும் களமிறங்கும்.