2024 ஆம் ஆண்டிற்கான மெர்சிடிஸ் AMG GLE 53 கூபே ஃபேஸ்லிஃப்ட் காரில் 3.0 லிட்டர் வி6 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் மைல்டு ஹைபிரிட் சேர்க்கப்பட்டு ரூ.1.85 கோடி விலையில் வெளியிடப்பட்டுள்ளது.
ஏஎம்ஜி ஜிஎல்இ காரில் புதுப்பிக்கப்பட்ட கிரில், புதிய ஹெட்லேம்ப் மற்றும் டெயில்லைட் பெறுவதுடன் பம்பர்களில் சிறிய மாற்றங்கள் மற்றும் அலாய் வீல் வடிவமைப்பு புதியதாக உள்ளது.
இன்டிரியரில் தனிப்பயனாக்கக்கூடிய ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஸ்டீயரிங் வீலில் கூடுதல் கண்ட்ரோல் பட்டன்கள் மற்றும் சூடான மற்றும் காற்றோட்டமான முன்பக்க இருக்கைகள். பாதுகாப்பு அம்சங்களில் 9 ஏர்பேக்குகள், பிளைண்ட் ஸ்பாட் அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, ‘ட்ரான்ஸ்பரன்ட் பானட்’ அம்சம் ஆகியவை உள்ளது.
3.0-லிட்டர் ஆறு-சிலிண்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 435 hp மற்றும் 560 Nm டார்க்கை வெளிப்படுத்துகின்றது. இதில் 4மேடிக் AWD அமைப்புடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 20 hp மற்றும் 200 Nm டார்க் v/bfhdkf சேர்க்கும் புதிய 48V மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டத்தைப் பெறுகிறது.
மெர்சிடிஸ் AMG GLE 53 கூபே காரில் 5 வினாடிகளில் மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டும் மற்றும் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும்.
MBUX இன்டீரியர் அசிஸ்டண்ட், உயர் செயல்திறன் கொண்ட பிரேக்குகள், பவர் க்ளோசிங் கதவுகள், டிரைவிங் அசிஸ்டென்ட் பேக்கேஜ், டாஷ் கேம் மற்றும் தீயை அணைக்கும் கருவி ஆகியவற்றை கொண்டுள்ளது. 2024 மெர்சிடிஸ் AMG GLE கூபே விலை ₹ 1.85 கோடி ஆகும்.