2024 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளிவரவுள்ள புதிய மஹிந்திராவின் 5-டோர் தார் (Mahindra Thar 5-door) எஸ்யூவி சந்தையில் உள்ள 3-டோர் மாடலை விட பல்வேறு மேம்பட்ட வசதிகள் மற்றும் 4X4 ஆல் வீல் டிரைவ் உடன் ஆஃப் ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக அமைந்திருக்கும்.
தார் 5 டோர் மாடல் அனேகமாக புதிய பெயரை தார் அர்மடா என்ற பெயரை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், தொடர்ந்து இந்திய சாலைகளில் சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வரும் இந்த காரின் புகைப்படங்கள் மூலம் உற்பத்தி நிலையை முழுமையாக எட்டியுள்ளது.
3-டோர் கதவை பெற்றுள்ள தார் எஸ்யூவி காரின் அதே என்ஜினை 5-டோர் மாடலும் பகிர்ந்து கொள்ள வாயுப்புள்ளது. 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் mStallion என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் mHawk என்ஜின் என இருவிதமான ஆப்ஷனில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது. இரண்டு மாடல்களும் ஒரே விதமான என்ஜினை பகிர்ந்து கொண்டாலும் நுனுக்கமான பவர்டிரையின் மேம்பாடு மற்றும் சஸ்பென்ஷனில் மாறுதல்கள் கொண்டிருக்கலாம்.
ஆஃப் ரோடு சாகச மேம்பாடுகளுக்கு மட்டுமல்லாமல் பல்வேறு டெக் சார்ந்த வசதிகளை 5-டோர் மஹிந்திரா Thar எஸ்யூவி இண்டிரியரில் 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் மற்றும் Adrenox கனெக்ட்டிவ் வசதிகளுடன் கூடிய 10.25 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆண்டராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே, வயர்லெஸ் சார்ஜர், டேஸ் கேமரா மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றை கொண்டிருக்கலாம்.
3 டோர் மாடலில் இருந்து வேறுபட்ட தோற்ற அமைப்பினை பெறும் வகையில் முன்பக்க கிரில் மாற்றப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற 5-டோர் மஹிந்திரா தார் அர்மடா விலை ரூ.14 லட்சத்தில் துவங்க வாய்ப்புள்ளதால், ஃபோர்ஸ் கூர்க்கா மற்றும் மாருதி ஜிம்னி மாடல்களை எதிர்கொள்ள உள்ளது.