பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் வரிசையில் புதிதாக இணைய உள்ள பஜாஜ் பல்சர் NS400 பைக் பற்றி முக்கிய தகவலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மிகவும் ஸ்போர்ட்டிவான அம்சங்களை கொண்டதாகவும், கனெக்ட்டிவிட்டி அம்சங்களை பெற்ற கிளஸ்ட்டர் ஆகியவற்றை கொண்டதாக வரவுள்ளது.
சந்தையில் கிடைக்கின்ற கேடிஎம் 390 டியூக் மற்றும் டிரையம்ப ஸ்பீடு 400 உள்ளிட்ட பைக்குகளை இடம்பெற்றுள்ள 44.25 bhp பவர் மற்றும் 39Nm டார்க் வழங்குகின்ற நிலையில் 399cc சிங்கிள்-சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜினை புதிய பஜாஜ் பல்சர் என்எஸ்400 பகிர்ந்து கொள்ள உள்ளது. இதில் ஆறு வேக கியர்பாக்ஸ் உடன் ஸ்லிப்ப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதி இடத்பெற்றிருக்கும்.
பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதில் அளித்த பஜாஜ் ஆட்டோ நிர்வாக இயக்குநர் ராகேஷ் சர்மா கூறுகையில், 125cc சந்தைக்கு மேல் உள்ள பைக் பிரிவில் மிகுந்த கவனம் செலுத்துவதாக குறிப்பிட்ட நிலையில் பல்சர் வரிசையில் மிகப்பெரிய மாடல் 2024-2025 ஆம் நிதியாண்டின் முதல் காலண்டில் வரும் என குறிப்பிட்டுள்ளதால் பல்சர் NS400 பைக் விற்பனைக்கு மே மாதம் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
இது தவிர வரும் மே மாதம் வரை பல்வேறு பைக்குளில் மேம்பாடுகளை வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, சமீபத்தில் பல்சர் N160 பைக்கில் டிஜிட்டல் கிளஸ்ட்டருடன் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி ஆப்ஷன் பெறுவது உறுதியாகியுள்ளது. மேலும் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் பைக் மாடலை விற்பனைக்கு 2025 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம்.
NSவிற்பனைக்கு வரவுள்ள பஜாஜ் பல்சர் NS400 பைக்கின் விலை ரூ.2.10 லட்சத்தில் துவங்க வாயுப்புள்ளது.