இந்தியாவின் குறைந்த விலை எலக்ட்ரிக் கார்களில் ஒன்றான சிட்ரோன் eC3 மாடலில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள ஷைன் வேரியண்ட் மூலம் தற்பொழுது விலை ரூ. 11.61 லட்சம் முதல் ரூ.13.49 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரை கிடைக்கின்றது.
சமீபத்தில் வெளியான டாடா பஞ்ச்.இவி காரின் அறிமுகத்தை தொடர்ந்து இசி3 காரில் கூடுதல் வசதிகள் பெற்ற வேரியண்ட் வெளியாகியுள்ளது.
இந்திய சந்தையில் தொடர்ந்து அதிகரித்து வரும் எலக்ட்ரிக் கார் விற்பனை எண்ணிக்கையில் டாடா முன்னிலை வகிக்கின்றது. சிட்ரோன் eC3 எஸ்யூவி காருக்கு போட்டியாக டியாகோ EV, டிகோர் EV மற்றும் MG காமெட் EV, டாடா பஞ்ச்.இவி ஆகியவை விற்பனையில் உள்ளன.
eC3 காரில் 29.2 kWh பேட்டரி பேக் பெற்று 57 hp பவர் மற்றும் 143Nm டார்க் வெளிப்படுத்துவதுடன் அதிகபட்சமாக ARAI சான்றளிக்கப்பட்ட 320 Km ரேஞ்ச் பெற்றுள்ளது. ஈகோ மற்றும் ஸ்டாண்டர்ட் என இரண்டு டிரைவிங் ஆப்ஷனுடன் பெற்று கூடுதலாக பவரை சேமிக்க ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் பெற்றுள்ளது.
இந்த மின்சார கார் 0 முதல் 60 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 6.8 வினாடிகள் எட்டுவதுடன் மணிக்கு அதிகபட்ச வேகம் 107 கிமீ பயணிக்கலாம். இந்த காருக்கு DC ஃபாஸ்ட் சார்ஜரை கொண்டு சார்ஜ் ஏற்றினால் 57 நிமிடங்களில் 0 முதல் 80 சதவிகிதம் சார்ஜ் செய்ய முடியும். சாதாரன வீட்டு சார்ஜரில், பேட்டரி 10 மணி 50 நிமிடங்கள் எடுத்துக் கொண்டு 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.
சிட்ரோன் ec3 காரின் பேட்டரிக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் அல்லது1,40,000 கிமீ வாரண்டியையும், மின்சார மோட்டாருக்கு 5 ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ வாரண்டியையும், இந்த காருக்கு 3 ஆண்டுகள் அல்லது 1,25,000 கிமீ வாரண்டியையும் வழங்குகிறது.
Citroen eC3 Prices:
Variant | Price |
---|---|
Live | ₹ 11.61 லட்சம் |
Feel | ₹ 12.69 லட்சம் |
Feel Vibe Pack | ₹ 12.84 லட்சம் |
Feel Dual Tone Vibe Pack | ₹ 12.99 லட்சம் |
Shine | ₹ 13.19 லட்சம் |
Shine Vibe Pack | ₹ 13.34 லட்சம் |
Shine Dual Tone Vibe Pack | ₹ 13.49 லட்சம் |
(All prices ex-showroom)