ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட் 350 பைக்கில் துவக்க நிலை மில்ட்டரி வேரியண்டில் சில்வர் சிவப்பு, சில்வர் கருப்பு என இரு நிறங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு விலை ரூ.1.79 லட்சம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே விற்பனையில் உள்ள புல்லட் 350 பைக்கின் ஆரம்ப நிலை மிலிட்டரி ரெட், பிளாக் விலை ரூ.1,74 லட்சம் முதல் டாப் வேரியண்ட் விலை ரூ. 2.16 லட்சம் வரை கிடைக்கின்றது.
Royal Enfield Bullet 350
புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக் மாடலில் 349cc என்ஜின் பொருத்தப்பட்டு 6100 RPM-ல் 20hp பவர் மற்றும் 4,000 RPM-ல் 27Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் ஆனது பெற்றிருக்கின்றது.
புல்லட் 350 பைக்கின் சஸ்பென்ஷன் அமைப்பினை பொறுத்தவரை 41 mm முன்புற டெலிஸ்கோபிக் ஃபோர்க் உடன் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர், டயரின் அளவில் முன்புறத்தில் 100/90 -19 மற்றும் பின்புறத்தில் 120/80 -18 உள்ளது. புல்லட் 350 மாடலின் எடை 195 கிலோ, கிரவுண்ட் கிளியரன்ஸ் 170 மிமீ, இருக்கை உயரம் 805 மிமீ மற்றும் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 13 லிட்டர் ஆகும்.
கூடுதலாக வந்துள்ள புதிய இரண்டு நிறங்களிலும் கைகளால் வரையப்ட்ட சில்வர் நிற பின் ஸ்டிரிப்பிங் கொண்டுள்ளது மற்றபடி,எந்த மாற்றமும் இல்லை. டாப் வேரியண்டில் கோல்டன் நிற பின்ஸ்டிரிப் பெற்றுள்ளது.
மில்ட்டரி வேரியண்ட், ஸ்டாண்டர்டு மற்றும் டாப் கோல்டு பிளாக் என மூன்று விதமாக கிடைக்கின்றது.