சிட்ரோன் நிறுவனத்தின் C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரில் மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் விற்பனையில் உள்ள நிலையில் கூடுதலாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஜனவரி 29 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதால் டீலர்களுக்கு டெலிவரியை துவங்கியுள்ளது.
சி3 ஏர்கிராஸ் காரில் 5 மற்றும் 5+2 என இரு விதமான இருக்கை ஆப்ஷனும் உள்ள நிலையில் ஆட்டோமேட்டிக் மாடல்கள் பிளஸ் மற்றறும் மேக்ஸ் வேரியண்டுகளில் மட்டும் வரவுள்ளது.
Citroen C3 Aircross
எற்கனவே சந்தையில் உள்ள சி3 ஏர்கிராஸ் காரில் அதிகபட்சமாக 110 PS பவரை 5500rpm-லும் மற்றும் 205 Nm டார்க் 1750rpm-ல் வழங்குகின்ற 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். சந்தையில் கிடைக்கின்ற மேனுவல் மாடலை விட 15Nm டாரக் கூடுதலாக உள்ளது. எனவே, தற்பொழுது வரவுள்ள 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
சி3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் பரிமாணங்கள் 4323mm நீளம், 1796mm அகலம் மற்றும் 1669mm உயரம் கொண்டிருக்கின்றது. மற்ற போட்டியாளர்களை விட கூடுதலான வீல்பேஸ் 2671mm கொண்டிருக்கின்றது.
புதிய சிட்ரோன் சி3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் விலை ரூ.12 லட்சத்தில் விற்பனைக்கு வரக்கூடும்.