ஆம்பியர் EV நிறுவனத்தின் அடுத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் NXG கான்செப்ட் அடிப்படையில் வரவுள்ள நெக்சஸ் ஸ்கூட்டர் மாடலுக்கு முன்பதிவு துவங்கியுள்ளது. முன்பதிவு கட்டணமாக ரூ.499 வசூலிக்கப்படுகின்றது.
Next Big Thing என்ற பிரச்சாரத்தின் மூலம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 5100+ கிமீ ரைடிங் துவங்கியுள்ளதால், இந்த சவாரி முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ விலை மற்றும் முழுமையான நுட்பவிபரம் அறிவிக்கப்படலாம்.
Ampere Nexus Escooter
NXG கான்செப்ட்டின் அடிப்படையில் பெறப்பட்ட டிசைன் கொண்டுள்ள இந்த புதிய ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் நெக்சஸ் என அழைக்கப்படலாம். புதிதாக வரவுள்ள மாடல் எல்இடி ரன்னிங் விளக்குடன் எல்இடி ஹெட்லைட் பெற்று வழக்கமான இந்திய ஸ்கூட்டர்களை போன்ற டிசைனை பெற்ற்றுள்ளது.
LFP பேட்டரி மூலம் இயக்கப்பட உள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 150 கிமீ வரை பெற்று 4 விதமான ரைடிங் மோடுகள் இடம்பெற உள்ளது. கிளஸ்ட்டரில் தொடுதிரை அமைப்புடன் பல்வேறு கனெக்ட்டிவ் சார்ந்த அம்சங்களை பெறக்கூடும்.
ஆம்பியர் நெக்சஸ் ஸ்கூட்டரின் இருபக்க டயர்களிலும் டிஸ்க் பிரேக், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஸ்பீரிங் அப்சார்பர் பெற்றுள்ளது.
ஆம்பியர் நெக்சஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.50 லட்சத்தில் துவங்கலாம்.