இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற எஸ்யூவிகளில் ஒன்றான ஹூண்டாய் நிறுவன கிரெட்டா காரின் 2024 ஆம் ஆண்டு மாடல் ரூ.11 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு ADAS நிலை 2, டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதல் வசதிகள் என பல்வேறு அம்சங்களை பெற்றதாக வந்துள்ளது.
மிக நேர்த்தியான வெளிப்புற ஸ்டைலிங் மாற்றங்கள், இன்டிரியரில் கூடுதல் வசதிகளுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேம்பட்ட வசதிகள் மற்றும் புதிய என்ஜின் போன்றவை ஹூண்டாய் கிரெட்டாவின் மீதான ஆர்வத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
2024 Hyundai Creta
முதன்முறையாக 8 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட நாள் முதல் இன்றைக்கு வரை தொடர்ந்து அமோகமான வரவேற்பினை பெற்ற 9.50 லட்சத்துக்கும் கூடுதலாக இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ள கிரெட்டா மூலம் நடுத்தர எஸ்யூவி சந்தையில் முதன்மையாகவும், ஹூண்டாய் யுட்டிலிட்டி வாகன சந்தையில் முக்கிய பங்களிப்பாளராக விளங்குகின்றது.
புதுப்பிக்கப்பட்ட 2024 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் முன்பக்க கிரில் கிடைமட்டமாக உள்ள கோடுகளுடன் மேற்பகுதியில் எல்இடி லைட் பார் உடன் இணைந்த எல்இடி ரன்னிங் விளக்குகள் மற்றும் டர்ன் இன்டிகேட்டரும் நகரும் வகையில் எல்இடி ஆக உள்ளது. பம்பரில் எல்இடி ஹெட்லைட் வழங்கப்பட்டு இரு வண்ண கலவையிலான தோற்றத்துடன் முன்புறத்தில் ஸ்கிட் பிளேட் உள்ளது.
பக்கவாட்டு தோற்ற அமைப்பில் பெரிதாக மாற்றமில்லாமல் ஸ்டைலிஷான புதிய 17 அங்குல அலாய் வீல் கொண்டுள்ளது. பின்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட பம்பரில் இரு நிற கலவையை கொண்டு டெயில் லைட் எல்இடி ஆகவும், எல்இடி லைட் பாரும் உள்ளது. பேஸ் வேரியண்டுகளில் எல்இடி பார் லைட் இடம்பெறவில்லை.
கிரெட்டா காரின் இன்டிரியரில் புதிய டேஸ்போர்ட் ஆனது பெற்று 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் 10.25 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆனது பெற்று ரைடிங் மோடுக்கு ஏற்ற வகையில் கிளஸ்ட்டர் டிசைன் ஆனது மாறுபடும்.
5 இருக்கைகள் கொண்ட இந்த காரில் ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு கனெக்டேட் வசதிகளுடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே பனோரமிக் சன்ரூஃப், 8-ஸ்பீக்கர் போஸ் சவுண்ட் சிஸ்டம், காற்றோட்டமான முன்பக்க இருக்கைகள் மற்றும் 8-வழி அட்ஜெஸ்ட் செய்யும் ஓட்டுநர் இருக்கை ஆகியவற்றைப் பெறுகின்றது.
2024 கிரெட்டா என்ஜின்
புதிய 2024 ஹூண்டாய் கிரெட்டாவில் 115 hp பவர், 143.8 Nm டார்க் வழங்குகின்ற 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜினுடன் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் (ivt) பெறுகின்றது.
116 hp பவர் மற்றும் 250 Nm டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 6 வேக ஆட்டோமேட்டிக் மற்றும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.
புதிய 1.5 லிட்டர் GDI டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 160 bhp மற்றும் 253 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 7 வேக DCT ஆட்டோ கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். இந்த மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 18.4Kmpl ஆகும்.
ஹூண்டாய் கிரெட்டா வசதிகள்
அடிப்படையாக 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் பிரேக் அசிஸ்ட் என மொத்தமாக 70க்கு மேற்பட்ட பாதுகாப்பு சார்ந்த வசதிகளுடன் இரண்டாம் நிலை ADAS பாதுகாப்பின் மூலம் ADAS லேன் கீப்பிங் அசிஸ்ட், முன்புற மோதலை தவிரக்கும் எச்சரிக்கை (FCW) மூலம் கார், பாதசாரிகள்,சைக்கிள் , ஜங்ஷன் உள்ளிட்டவைக்கு, ஸ்மார்ட் க்ரூஸ் கண்ட்ரோல் மூலம் ஸ்டாப் மற்றும் கோ ( SCC with S&G), காரை சுற்றி அறியும் வசதி, பிளைன்ட் ஸ்பாட் என 19க்கு மேற்பட்ட வசதிகள் இடம்பெற்றிருக்கின்றது. அவற்றில் 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட் கண்காணிப்பு அமைப்பு, டயர் பிரஷர் கண்காணிப்பு அமைப்பு, ஆல்-வீல் டிஸ்க் பிரேக் மற்றும் எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) ஆகியவை கிடைக்க உள்ளது.
கிரெட்டா எஸ்யூவி போட்டியாளர்கள்
இந்திய சந்தையில் நடுத்தர எஸ்யூவி மாடல் பிரிவில் உள்ள கியா செல்டோஸ் உட்பட டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர், மாருதி கிராண்ட் விட்டாரா, ஃபோக்ஸ்வேகன் டைகன், ஹோண்டா எலிவேட், எம்ஜி ஆஸ்டர், டாடா ஹாரியர் மற்றும் சிட்ரோன் C3 ஏர்கிராஸ் உள்ளிட்ட எஸ்யூவி கார்களை ஹூண்டாய் கிரெட்டா எதிர்கொள்ளுகின்றது.
New Hyundai Creta Price list
2024 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி மாடலில் மூன்று என்ஜின் ஆப்ஷனுடன் E, EX, S, S(O), SX, SX Tech, மற்றும் SX(O) மொத்தமாக 7 விதமான வேரியண்ட் அடிப்படையில் மொத்தம் 19 வகைகளில் கிடைக்கின்றது.
எமரால்டு பேர்ல் (புதிய), ஃபியரி ரெட், ரேஞ்சர் காக்கி, அபிஸ் பிளாக், அட்லஸ் ஒயிட், டைட்டன் கிரே மற்றும் கருப்பு நிற கூரையுடன் அட்லஸ் ஒயிட் நிறத்தில் டூயல் டோன் கிடைக்கின்றது.
Engine | Transmission | Variants | Ex-showroom price |
1.5-litre NA petrol | 6 MT | E | Rs. 10,99,900 |
EX | Rs. 12,17,700 | ||
S | Rs. 13,39,200 | ||
S(O) | Rs. 14,32,400 | ||
SX | Rs. 15,26,900 | ||
SX Tech | Rs. 15,94,900 | ||
SX(O) | Rs. 17,23,800 | ||
CVT | S(O) | Rs. 15,82,400 | |
SX Tech | Rs. 17,44,900 | ||
SX(O) | Rs. 18,69,800 | ||
1.5-litre turbo-petrol | 7 DCT | SX(O) | Rs. 19,99,900 |
1.5-litre diesel | 6 MT | E | Rs. 12,44,900 |
EX | Rs. 13,67,700 | ||
S | Rs. 14,89,200 | ||
S(O) | Rs. 15,82,400 | ||
SX Tech | Rs. 17,44,900 | ||
SX(O) | Rs. 18,73,900 | ||
6 AT | S(O) | Rs. 17,32,400 | |
SX(O) | Rs. 19,99,900 |