இந்திய சந்தையின் எஸ்யூவி மாடல்களில் 5+2 இருக்கை கொண்ட C3 ஏர்கிராஸ் காரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் ஜனவரி 29ல் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
விற்பனையில் கிடைக்கின்ற சி3 ஏர்கிராஸ் மாடலில் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் ரூ.10 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை கிடைக்கின்றது. எனவே ஆட்டோமேட்டிக் மாடல் ரூ.12 லட்சத்தில் துவங்க வாய்ப்புகள் உள்ளது.
Citroen C3 Aircross
C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரில் வரவுள்ள ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் அதிகபட்சமாக 110 PS பவரை 5500rpm-லும் மற்றும் 205 Nm டார்க் 1750rpm-ல் வழங்குகின்ற 1.2 லிட்டர் ப்யூர்டெக் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். சந்தையில் கிடைக்கின்ற மேனுவல் மாடலை விட 15Nm டாரக் கூடுதலாக உள்ளது.
இதில் பொருத்தப்பட்ட உள்ள Aisin நிறுவனத்தின் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது. இந்த கியர்பாக்ஸ் இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஸ்கோடா குஷாக், ஸ்லாவியா, எம்ஜி ஆஸ்டர், ஃபோக்ஸ்வேகன் டைகன் மற்றும் விர்டஸ் ஆகியவற்றில் உள்ளது.
C3 ஏர்கிராஸ் எஸ்யூவி காரின் பரிமாணங்கள் 4323mm நீளம், 1796mm அகலம் மற்றும் 1669mm உயரம் கொண்டிருக்கின்றது. மற்ற போட்டியாளர்களை விட கூடுதலான வீல்பேஸ் 2671mm கொண்டிருக்கின்றது.
ஏற்கனவே இந்தோனேசியா சந்தையில் காட்சிப்படுத்தப்பட்ட சிட்ரோன் C3 ஏர்கிராஸ் ஆட்டோமேட்டிக் விற்பனைக்கு இந்தியாவில் நடப்பு ஜனவரி 29 ஆம் தேதி வரவுள்ளது.