டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பஞ்ச்.இவி எலக்ட்ரிக் எஸ்யூவி டீலர்களை வந்தடைய துவங்கியுள்ளதால் அடுத்த சில நாட்களுக்குள் விலை அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக காரின் இன்டிரியர் சந்தையில் உள்ள நெக்ஸான்.இவி காரில் இருந்து பெறப்பட்டுள்ளது.
சமீபத்தில் டாடா.இவி அறிமுகம் செய்த Acti.ev பிளாட்ஃபாரத்தை பெற்று முதல் மாடலாக பஞ்ச்.இவி விற்பனைக்கு வரவுள்ளது.
Tata Punch.ev suv
சிறிய ரக எஸ்யூவி சந்தையில் நல்ல வரவேற்பினை கொண்டுள்ள ICE பஞ்ச் அடிப்படையாக கொண்டு எலக்ட்ரிக் கார்களுக்கு உரித்தான பல்வேறு மாற்றங்களை பெற்று தயாரிக்கப்பட்டுள்ள காரின் இன்டிரியர் ஆனது இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாடு சுவிட்ச் பெற்று மத்தியில் ஒளிரும் வகையிலான டாடா லோகோ, மிதக்கும் வகையிலான 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டிருக்கின்றது.
இந்த காரில் 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர், க்ரூஸ் கண்ட்ரோல், Arcade.ev ஆப் வசதி, ஆட்டோ ஹோல்டு உடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆறு ஏர்பேக்குகளையும் பெற்றிருப்பதுடன் ஏபிஎஸ், இஎஸ்பி ஆகியவற்றை கொண்டிருக்கும்.
பேட்டரி மற்றும் ரேஞ்ச் தொடர்பாக எந்த தகவலையும் டாடா வெளியிடவில்லை என்றாலும் அனேகமாக Standard 25 kWh பேட்டரி பேக் மற்றும் Long Range 35 kWh பேட்டரி என இருவிதமாக பெற்றிருக்கலாம். எனவே ரேஞ்ச் தோராயமாக 350-450 கிமீ வரை வெளிப்படுத்தலாம். பஞ்ச் எலக்ட்ரிக் காரில் 3.3 kw மற்றும் 7.2kW வரை AC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜிங் 150kW வரை ஆதரிக்கலாம்.
16 அங்குல அலாய் வீல் பெறுகின்ற மாடலின் பின்புறத்தில் டாடா பஞ்ச்.இவி காரின் பெயருடன் Y- வடிவ பிரேக் லைட் அமைப்பு, கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் டூயல்-டோன் பம்பர் மற்றும் நான்கு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் பெற்றிருக்கும். முன்பக்கம் டாடா நெக்ஸான்.இவி உந்துதலை பெரும்பகுதி பெற்ற பானெட், எல்இடி ஹெட்லைட் ஆகியவற்றை பெற்றுள்ளது.
வரும் ஜனவரி 17 ஆம் தேதி ரூ.12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் விலைக்குள் எதிர்பார்க்கப்படுகின்ற டாடா பஞ்ச்.இவி காரின் போட்டியாளரான சிட்ரோன் ec3, எம்ஜி காமெட் ஆகியவை உள்ளன.
image source – Darshan Patel