தமிழ்நாட்டில் ரூ.16,000 கோடி முதலீட்டை மேற்கொள்ளும் வின்ஃபாஸ்ட் ஆட்டோ நிறுவனம் CES 2024 அரங்கில் VF3 எலெக்ட்ரிக் மினி எஸ்யூவி மற்றும் VF வைல்ட் எலக்ட்ரிக் பிக்கப் டிரக் கான்செப்ட் ஆகியவற்றை அறிமுகம் செய்து காட்சிப்படுத்தியுள்ளது.
2024 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் துவங்கப்பட உள்ள வின்பாஸ்ட் நிறுவனம் முதற்கட்டமாக ரூ.4000 கோடியில் ஒருங்கிணைந்த பேட்டரி மற்றும் வாகன தயாரிப்பு ஆலையை 2024 ஆம் ஆண்டு இறுதி அல்லது 2025 ஆம் ஆண்டு திறக்க உள்ளது.
Vinfast VF3 mini E-SUV
CES 2024 அரங்கில் வெளியிடப்பட்டுள்ள மினி எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல் VF3 முழுமையான சிங்கிள் சார்ஜில் 201 கிமீ நிகழ் நேர ரேஞ்ச் வழங்கும் என குறிப்பிட்டுள்ளது. மினி எஸ்யூவி மாடல் மிக நேர்த்தியான தோற்ற பொலிவினை வெளிப்படுத்தும் வகையில் பாக்ஸ் டிசைனை பெற்று முன்புறத்தில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு எல்இடி ஹெட்லைட் மத்தியில் க்ரோம் பட்டையில் Vinfast லோகோ கொடுக்கப்பட்டு 16 அங்குல அலாய் வீல் உடன் L3190 x W1679 x H1623 (mm) பரிமாணங்கள் பெற்றுள்ளது.
4 இருக்கை கொண்ட வின்ஃபாஸ்ட் விஎஃப்3 காரில் பின்புற இரண்டாவது வரிசை இருக்கைகளை மடக்கும் பொழுது 550 லிட்டர் கொள்ளளவு ஸ்டோரேஜ் பெற்றுள்ளது. மற்ற செயல்பாடுகளில் பொழுதுபோக்கு அம்சங்களும் ஓட்டுநர்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடமளிக்கும் வகையில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதியை பெற வின்ஃபாஸ்ட் VF3 காரில் 10-இன்ச்-ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது.
VF Wild Pickup concept
அடுத்து வின்ஃபாஸ்ட் காட்சிப்படுத்தியுள்ள VF வைல்ட் பிக்கப் எலக்ட்ரிக் கான்செப்ட் அனைத்து விதமான சாலைகளில் பயணிக்கும் திறன் பெற்றதாக விளங்குவதுடன் டெஸ்லா உள்ளிட்ட பல்வேறு பிக்கப் எலக்ட்ரிக் டிரக்குகளை எதிர்கொள்ள உள்ளது.
VF wild கான்செப்ட் 5324mm நீளம் மற்றும் 1997mm அகலம் பெற்று மிக இலகுவாக பொருட்களை சுமந்து செல்ல எற்ற கார்கோ பெட் 5 முதல் 8 அடி நீளத்துக்கு வழங்கப்பட உள்ளது. ஏரோடைனமிக்ஸை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல் முறையிலான சைட் மிரர் மற்றும் மேற்கூறையில் அகலமான பேனரோமிக் கண்ணாடி கொடுக்கப்பட்டுள்ளது.
8,000 மணி நேரத்திற்கும் கூடுதலான நேரத்தில் உருவாக்கப்பட்ட மற்றும் பல வடிவமைப்பாளர்களை உள்ளடக்கிய இந்த வடிவமைப்பு, சூப்பர் ஹீரோவுக்கு இணையானதாக புதிய “Fluid Dynamism” அழகியல் வடிவைப்பினை பெற்றுள்ளது.
விஎஃப் வைல்ட் கான்செப்ட்டை வின்ஃபாஸ்ட் மற்றும் ஆஸ்திரேலிய டிசைன் ஸ்டுடியோ கோமிடிவ் இணைந்து உருவாக்கியுள்ளது.
இந்திய சந்தையில் முதல் மாடலாக VF3 மினி எஸ்யூவி விற்பனைக்கு மிக சவாலான விலையில் 2025 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரக்கூடும்.