கியா அறிமுகம் செய்துள்ள புதிய சொனெட் எஸ்யூவி காரின் விலை விபரம் முழுமையாக ஜனவரி 12 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. முந்தைய மாடலை விட பல்வேறு வகையில் மேம்பட்டு கூடுதல் வசதிகளை பெற்றதாக வரவுள்ளது.
4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள எஸ்யூவி ரக மாடல்களுக்கு சவால் விடுக்கின்ற வகையில் அமைந்துள்ள சொனெட் காரில் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் கொண்டுள்ளது.
2024 கியா சொனெட்
ஃபேஸ்லிஃப்ட் 2024 கியா சொனெட் காரில் 82 hp பவர் மற்றும் 115Nm டார்க் வெளிப்படுத்தும் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அடுத்து, 118 hp பவர் மற்றும் 172Nm டார்க் வெளிப்படுத்தும் 1.0-லிட்டர் GDI 6-ஸ்பீடு iMT மற்றும் 7-ஸ்பீடு DCT ஆட்டோமேட்டிக் கிடைக்கும்.
இறுதியாக, 114 hp பவர் மற்றும் 250Nm டார்க் வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜினில் 6 வேக மேனுவல், 6-ஸ்பீடு iMT மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற்றதாக வரவுள்ளது.
மொத்தமாக 3 என்ஜின்களை பெற்று 5MT, 6MT, 6iMT, 7DCT, மற்றும் 6AT ஆகிய கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கின்றது.
முதல்நிலை அதிநவீன ஓட்டுதர் உதவி அமைப்பினை பெறுகின்ற கியா சொனெட் காரில் 10 விதமான தானியங்கியாக செயல்பட்டு வாகன ஒட்டுநர் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துகின்றது. 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இஎஸ்பி, பின்புற பார்க்கிங் சென்சார்கள், எமர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், டயர் பிரஷர் மானிட்டர், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர் லாக் உள்ளிட்டவற்றை பெறுகின்றது.
2024 கியா சொனெட் ஃபேஸ்லிஃப்ட் வேரியண்ட் வாரியான வசதிகளை முன்பே வெளியிட்டிருக்கின்றோம். புதிய காரின் விலை ரூ.8 லட்சத்தில் துவங்கலாம்.
மேலும் படிக்க – 2024 Kia Sonet மைலேஜ் விபரம்