காம்பேக்ட் எஸ்யூவி சந்தையில் மேம்பட்ட வசதிகளை பெற்ற 2024 கிகர் எஸ்யூவி மாடலை ரூ.6 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வரை நிர்ணயம் செய்யபட்டு ரெனால்ட் இந்தியா நிறுவனம் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.
4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களான சோனெட், வெனியூ, நெக்ஸான், மேக்னைட் மற்றும் மாருதி பிரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களை கிகர் எதிர்கொள்ளுகின்றது.
2024 Renault Kiger
இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனை பெறுகின்ற கிகர் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 72hp பவரை 6,250rpm-லும், 96 Nm டார்க் 3,500rpm-ல் வழங்கக்கூடிய மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் உள்ளது.
கிகர் எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 100 hp பவரை 5,000rpm மற்றும் 160 Nm டார்க் 2,800-3,600 rpm-ல் (152Nm – CVT) வழங்குகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.
கூடுதலாக டர்போ என்ஜின் பெற்ற வேரியண்டில் நார்மல், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவ் மோடு இடம்பெற்றிருக்கும்.
கூடுதலாக, புதிய 2024 மாடலில் தோலால் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீலுடன் செமி-லெதரெட் இருக்கை கொண்டதாகவும் சிவப்பு நிறத்தை பெற்ற பிரேக் காலிப்பர்கள், ஆட்டோ-டிம்மிங் IRVM மற்றும் ஆட்டோ-ஃபோல்டிங் ORVM மற்றும் வரவேற்பு மற்றும் குட்பை செயல்பாடு கொண்ட சிக்னேச்சர் விளக்குகளை கொண்டுள்ளது.
கேமரா மற்றும் பின்புற வைப்பருடன் கூடுதலாக டாப் வேரியண்ட் RXL பின்புற ஏசி வென்ட், PM2.5 காற்று ஃபில்டர் பெறுகிறது
2024 RENAULT Kiger | |||
---|---|---|---|
Variant | |||
RXE | Rs 6.00 lakh | ||
RXL | Rs 6.60 lakh | ||
RXL AMT | Rs 7.10 lakh | ||
RXT | Rs 7.50 lakh | ||
RXT AMT | Rs 8.00 lakh | ||
RXT (O) | Rs 8.00 lakh | ||
RXT(O) AMT | Rs 8.50 lakh | ||
RXZ | Rs 8.80 lakh | ||
RXZ AMT | Rs 9.30 lakh | ||
RXT(O) turbo | Rs 9.30 lakh | ||
RXT(O) turbo CVT | Rs 10.29 lakh | ||
RXZ Turbo | Rs 10.00 lakh | ||
RXZ Turbo CVt | Rs 11.00 lakh |