டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மின்சார பேட்டரி வாகன சந்தையில் புதிய பஞ்ச்.இவி மாடலை ஜனவரி 5, 2024 ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதால் முன்பதிவு உடனடியாக துவங்கப்பட்டு விற்பனைக்கு ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்படலாம்.
பஞ்ச் இவி காரில் MR மற்றும் LR என இருவிதமான வேரியண்ட் பேட்டரி ஆப்ஷன் அடிப்படையில் பெற்றிருக்கலாம்.
Tata Punch.ev
பிரத்தியேகமாக டாடா மோட்டார்ஸ் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு என பிரத்தியேக டீலரை துவங்கிய நிலையில் பொதுமக்களுக்கு 7 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இதே நேரத்தில் இன்றைக்கு தனது சமூக வலைதளத்தில் டீசர் ஒன்றை வெளிய்யுட்டு பஞ்ச் எலக்ட்ரிக் அறிமுகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளராக உள்ள டாடா மோட்டார்ஸ் நெக்ஸான்.இவி, டிகோர்.இவி, டியாகோ.இவி ஆகிநற்றை விற்பனை செய்து வரும் நிலையில் ரூ.10 லட்சத்துக்குள் விலை துவங்கும் வகையில் பஞ்ச் மாடலை வெளியிட உள்ளது.
தோற்ற அமைப்பில் முன்பகுதி புதுப்பிக்கப்பட்ட கிரில் மற்றும் எல்இடி புராஜெக்டர் விளக்குகளுடன் புதிய அலாய் வீல் மற்றும் எல்இடி டெயில் விளக்கு புதுப்பிக்கப்பட்டிருக்கலாம். இன்டிரியரில் இரண்டு ஸ்போக் கொண்ட ஸ்டீயரிங் வீல், 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொண்டிருக்கலாம்.
இந்த காரில் 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹோல்டு உடன் கூடிய எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் ஆறு ஏர்பேக்குகளையும் பெற்றிருக்கும்.
பஞ்ச்.இவி மாடலில் MR வேரியண்டில் டிகோர் மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 26 kWh பேட்டரி பேக் பெற்று 75 PS பவர் மற்றும் 170 Nm டார்க் வெளிப்படுத்தலாம். முழுமையான சிங்கிள் சார்ஊஇல் 315 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
LR வேரியண்டில் நெக்ஸான்.இவி MR மாடலில் இடம்பெற்றிருக்கின்ற 30 kWh பேட்டரி பேக் பெற்று 129 PS பவர் மற்றும் 215 Nm டார்க் வெளிப்படுத்தலாம். முழுமையான சிங்கிள் சார்ஊஇல் 325 கிமீ ரேஞ்ச் வழங்கும் என ARAI சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, டாடா மோட்டார்ஸ் பஞ்ச்.இவி விலை ரூ.10 லட்சத்துக்குள் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலதிக விபரங்கள் நாளை வெளியாகலாம். சமீபத்தில் ICE என்ஜின் பெற்ற டாடா பஞ்ச் உற்பத்தி எண்ணிக்கை 3 லட்சம் எட்டியுள்ளது.