ஆம்பியர் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பாளரின் புதிய NXG கான்செப்ட் அடிப்படையிலான ஸ்கூட்டர் மாடல் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் படங்கள் முதன்முறையாக வெளியாகியுள்ளது.
ஆம்பியர் சந்தையில் பிரைமஸ் உட்பட பல்வேறு மாடல்களை குறைந்த வேகம் உள்ள சந்தையிலும் விற்பனை செய்து வருகின்றது.
Ampere NXG spied
2023 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்முறையாக காட்சிக்கு வந்த NXG எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அடிப்படையில் சோதனை ஓட்டத்தில் உள்ள புதிய ஆம்பியர் மாடல் ரேஞ்ச் 120 கிமீ முதல் 150 கிமீ வரை வெளிப்படுத்தலாம்.
என்எக்ஸ்ஜி ஸ்கூட்டரில் முழுமையான எல்இடி விளக்கு, மிக நேர்த்தியான ஸ்போர்ட்டிவ் டிசைன் கொண்ட அப்ரான், முன்புறத்தில் டிஸ்க் பிரேக் பெற்றுள்ள நிலையில், பின்புறத்தில் டிரம் பிரேக் கொண்டதாக அமைந்துள்ளது. மிக அகலமான டிஜிட்டல் டிஸ்பிளே கொடுக்கப்பட்டு தொடுதிரை அம்சத்துடன் பல்வேறு கனெக்ட்டிவிட்டி சார்ந்த வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்படலாம்.
நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்ற ஆம்பியர் NXG விலை ரூ.1.70 லட்சத்துக்குள் வெளியாகலாம்.