செர்பா 450 என்ஜின் பெற்ற முதல் மாடலான ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் விலையை அதிகபட்சமாக ரூ.16,000 வரை உயர்த்தியுள்ளதால் ரூ.2.85 லட்சம் முதல் துவங்கி ரூ.2.98 லட்சம் வரை அதிகரித்துள்ளது.
முன்பாக ஹிமாலயன் 450 விற்பனைக்கு வந்த பொழுது விலை ரூ. 2.69 முதல் ரூ.2.84 லட்சம் வரை கிடைத்து வந்தது.
Royal Enfield Himalayan 450 Price hiked
செர்பா 452cc என்ஜின் பொருத்தப்பட்டு ஒற்றை சிலிண்டர் 4 வால்வுகளுடன் கூடிய DOHC லிக்யூடு கூல்டு என்ஜின் ஆனது அதிகபட்சமாக 8,000rpm-ல் 40 bhp பவர் மற்றும் 5,000rpm-ல் 40 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இந்த மாடலில் 6 வேக கியர்பாக்ஸ் உடன் சிலிப்பர் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் இடம்பெற்றுள்ளது.
17 லிட்டர் கொள்ளளவு பெற்ற பெட்ரோல் டேங்க் உடன் கெர்ப் எடை வெறும் 196 கிலோ கிராம் எடை கொண்டுள்ள பைக்கில் 90/90-R21 அங்குல வீல் மற்றும் பின்புறத்தில் அகலமான ரேடியல் 140/80-R17 அங்குல வீல் பெற்றதாக அமைந்திருக்கின்றது. டூயல் சேனல் ஏபிஎஸ் உடன் சுவிட்சபிள் ஏபிஎஸ் வசதி உள்ளது.
சமீபத்தில் இந்நிறுவனம் ஆக்செரீஸ்களின் விலையை ரூ.950 முதல் துவங்கி பேனியர் கருப்பு அல்லது சில்வர் என இரு நிறத்தில் கிடைக்கின்ற நிலையில் விலை ரூ. 32,950 ஆக வெளியிட்டடது.
ஹிமாலயன் 450 ஆரம்ப விலை ரூ. 2.85 லட்சத்தில் பேஸ் (Base) வேரியண்ட் காசா பிரவுன் நிறத்தை மட்டுமே பெறுகிறது. ரூ.2.89 லட்சத்தில் பாஸ் (Pass) வேரியண்ட் ஸ்லேட் ஹிமாலயன் சால்ட் மற்றும் ஸ்லேட் பாப்பி ப்ளூ என இரண்டிலும் மற்றும் டாப் ஸ்பெக் சம்மிட் (Summit) வேரியண்ட் ரூ.2.93 லட்சத்தில் காமெட் ஒயிட் மற்றும் பலரையும் கவருகின்ற ஹான்லே பிளாக் விலை ரூ.2.98 லட்சம் ஆக உள்ளது.
Royal Enfield Himalayan 450 on-Road price in Tamil Nadu
ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.3.41 லட்சம் முதல் ரூ.3.56 லட்சம் வரை கிடைக்கின்றது.
Himalayan 450 | EX-SHOWROOM | ON-ROAD PRICE |
---|---|---|
Base (Kaza Brown) | Rs.2,85,000 | Rs.3,41,186 |
Pass (Slate poppy blue /slate himalayan salt) | Rs.2,89,000 | Rs.3,46,533 |
Summit (Kamet White) | Rs.2,93,000 | Rs.3,51,580 |
Summit (Hanle Black) | Rs.2,98,000 | Rs.3,56,127 |
(All prices Tamil Nadu)