வால்வோ ஐஷர் வர்த்தக நிறுவனத்தின் ஐஷர் பிரிவின் கீழ் Pro 8035XM டிப்பர் டிரக் சுரங்க பயன்பாடுக்கு ஏற்ற வகையில் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சுரங்க பயன்பாடுகளுக்கான ஏற்ற வகையில் பல்வேறு அம்சங்களை பெற்ற இந்த டிரக் தீவிர மற்றும் சவாலான சுரங்க சூழலுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
Eicher Pro 8035XM
இ ஸ்மார்ட் ஷிஃப்ட் எனப்படுகின்ற ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற ஐஷர் புரோ 8035XM டிப்பர் டிரக்கில் 1350Nm டார்க் வழங்குகின்ற VEDX8, BS-VI என்ஜின் பொருத்தப்பட்டு 346 hp பவரை வெளிப்படுத்துகின்றது. 35,000 கிலோ GVW பிரிவில் வந்துள்ளது.
வால்வோ ஐஷர் சிஇஓ மற்றும் எம்டி வினோத் அகர்வால் கூறுகையில், “ஐஷர் Pro 8035XM E-smart டிரக் எங்கள் அர்ப்பணிப்பு முயற்சிகளின் 15 ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களுக்கு செயல்பாட்டு திறனை அதிகரிக்க மேம்படுத்தப்பட்ட அம்சங்களை வழங்குகிறது.
அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு வளர்ச்சி மூலம் நாட்டில் டிப்பர் தேவையை உந்துதலுடன், இந்த மாடல் தேசிய வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும். இந்த வாகனம் இந்திய சுரங்கத் தொழிலை முன்னேற்றுவதற்கும், தேசத்தின் முன்னேற்றத்திற்கு எங்களின் அர்ப்பணிப்புக்கு சான்றாக விளங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்திய சுரங்க டிப்பர் வாகன சந்தையில் பல ஆண்டுகளாக, ஐஷர் ப்ரோ 8000 சீரிஸ் டிப்பர்கள் முன்னணியாக உள்ள நிலையில் மற்றும் கேபின் தரத்துடன் இந்திய டிரக்குகளின் உச்சத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என ககன்தீப் சிங் கந்தோக், டிரக் பிசினஸ், VECV தலைவர் குறிப்பிட்டுள்ளார்.